மீனின் தலை.. இதை மிஸ் பண்ணிட்டோமே இவ்ளோ நாளா.. பெஸ்ட் மீன் தலைகள்.. 3 நிமிஷம்தான் அந்த தலை வேகணுமாம்
சென்னை: சிவப்பு நிறத்திலான இறைச்சியில் இருப்பதைவிட, மீன் தலையில் அந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளது என்கிறார்கள்.. மீன்தலையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
கடையில் மீனை வாங்கும்போதே, பலரும் அதன் தலையை வெட்டி எடுத்துவிட்டுதான், வாங்கி வருகிறார்கள்.. ஆனால், மீனின் உடல் பகுதியை விட தலைப்பகுதியில் நிறைய வைட்டமின்களும், தாதுக்களும், ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. ஆரோக்கியமான புரதமும், இந்த மீனின் தலைப்பகுதியிலேயே ஒளிந்துள்ளது.

இறைச்சி : மற்ற இறைச்சி வகைகளில் இல்லாத அளவுக்கு செறிவூட்டப்பட்ட கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பதும், இதே தலைப்பகுதியில்தான்.. அதனால், மீன் தலையை சாப்பிட்டால், கொழுப்பு அதிகரிக்காது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தாராளமாக மீன் தலையை சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும்.
மீன் தலையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இந்த மீன்தலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. விலை மலிவான மீன் மற்றும் மீன் தலையில் வைட்டமின் D இருப்பதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள். தாம்பத்திய பிரச்சினைகள் தீர வேண்டுமானாலும், இந்த மீன் தலைகளை கட்டாயம் சாப்பிட வேண்டுமாம். காரணம், பெண்ணின் ஹார்மோன் அதிகரிக்க செய்கிறது இந்த மீனின் தலைகள்.
ஒமேகா அமிலம்: ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு கொழுப்பு அளவு குறைவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. ஒமேகா அமிலம் இதய நோய்களில் இருந்து காக்கும் தன்மை கொண்டது. இதனால், பக்கவாதம், மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுகின்றன..
மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த மீன் தலை உதவுகிறது. வைட்டமின் A நிறைந்த உணவு என்பதால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை தீர்க்கிறது.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில், மீன் தலைகளுக்கு முக்கிய பங்கு உண்டு..
மூட்டு வலி: மூட்டுவலி, மூட்டு வீக்கம், முழங்கால் வலி போன்றவை குறைய இந்த மீன் தலையை அடிக்கடி சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில், அதிக வயிறு வலி இருந்தால், இந்த மீன் தலையை சாப்பிட்டு வரலாம்.. அதுவும், மீன் இப்படி குழம்பு வைத்துதான் சாப்பிட வேண்டுமாம்.. இதனால், முழு சத்துக்களும் நமக்கு வீணாகாமல் கிடைக்கும். தேவைப்பட்டால் காய்கறிகளை சேர்த்து சமைக்கும்போது, கூடுதல் சத்துக்கள் கிடைக்கும்.
இதை எப்படி செய்வது தெரியுமா? மீன் தலையை சுத்தமாக கழுவி உப்பு, மஞ்சள் தூள் தடவி ஊற வைக்க வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்க வேண்டும்.
கிரேவி ரெடி: இதில், வெட்டி வைத்திருக்கும் வெண்டைக்காய், கத்திரிக்காய் போட்டு, மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, உப்பு சேர்க்க வேண்டும். இறுதியில் குழம்பு கொதித்ததும், மீன் தலைகளை அதில் போட்டு, 3 நிமிடத்தில் இறக்கினால், கிரேவி ரெடி. மீன் தலைகளை 3 நிமிடம்தான் வேக வைக்க வேண்டுமாம்.
கேரளாவில், மீன் தலைக்கறி குழம்பு என்றே ஸ்பெஷலாக குழம்பு வைப்பார்கள். ஒரு கடாயில், தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது மஞ்சள் தூள், உப்பு தூள், குடம்புளி சேர்த்து, அதில், மீன் தலைகளையும் சுத்தம் செய்து போட வேண்டும்.
மண் சட்டி: இன்னொரு மண் சட்டியில், எண்ணெய், கடுகு, வெந்தயம், நசுக்கிய இஞ்சி, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள், மல்லி தூள் சேர்க்கவும்.. தீயை மிதமாக குறைத்து, தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும். குழம்ப கொதிக்க ஆரம்பித்ததுமே, குடம்புளியுடன் சமைத்த மீன் தலைகளை அதில் கொட்டிவிட வேண்டும். 8 முதல் 10 நிமிடம் கழித்து, கறிவேப்பிலை சேர்த்து, தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி இறக்கி மூடிவைத்துவிட வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications