ஜாதிப்பத்திரி.. மூக்கை துளைக்கும் வாசம்.. இதைவிடுங்க.. ஜாதிபத்திரி மூலிகையில் ஆச்சரியம்.. சரும கவசம்
சென்னை: பிரியாணிகளில் தவிர்க்கவே முடியாதது ஜாதிப்பத்திரி என்ற வாசனை பொருள்.. ஆனால், ஜாதிப்பத்திரியின் தேவைகள் பிரியாணியுடனே நின்றுவிடுகிறது என்பதுதான் வேதனையான விஷயம்.
ஜாதிக்காய் விதையின், மேல்புறத்தில், ரெட் கலரில் மெல்லிய தோல் போல இருப்பதைதான் ஜாதிப்பத்திரி என்கிறோம்.. இதன் பூக்கள் ஆரஞ்சு கலரில் இருக்கும்..

ஜாதிபத்திரி: இந்த தோல் பகுதியான ஜாதிபத்திரியும் சரி, இதன் பூக்களும் சரி, அதனுள் இருக்கும் ஜாதிக்காய் கொட்டையும்சரி, எல்லாமே ஒரே மாதிரியான பலன்களை அள்ளித்தருபவை.
இந்த ஜாதிப்பத்திரி விதையில் உள்ள பழத்தை எடுத்து வெயிலில் காய வைத்து ஜாதிபத்திரி தயாரிக்கிறார்கள். ஜாதிபத்திரியில் கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்புச்சத்து, நார்ச்சத்துக்கள், வைட்டமின் A, C, ஃபோலேட், நியாசின், பைரிடாக்சின், ரைபோஃபிளவின், மெக்னீசியம், மாங்கனீசு, சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஜாதிப்பத்திரியில் நிறைந்துள்ளன.. லேசாக கசப்புத்தன்மை இதில் இருக்கும்.
சத்துக்கள்: இந்த ஜாதிப்பத்திரியை நறுமண பொருள் என்பதைவிட, அஜீரணத்தை போக்கக்கூடிய மூலிகை பொருள் என்றே சொல்லலாம் மேலும், தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள், ஜாதிப்பத்திரியில் டீ போல தயாரித்து குடித்தால், நல்ல தூக்கம் வரும். அல்லது வெறுமனே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இந்த ஜாதிப்பத்திரியை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இதிலுள்ள நார்ச்சத்துகள் ஜீரண சக்தியை பெருக்குகிறது.. இதிலுள்ள மாங்கனீஸ் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது... இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த அபிவிருத்திக்கு உதவுகிறது.. இதிலுள்ள ஜிங்க் சத்துக்கள், பசியை தூண்டும் பொருளாக செயலாற்றுகிறது.
இரும்புச்சத்து: இதிலுள்ள இரும்புச்சத்து, அனிமியா, தசைகள் பலவீனம் போன்றவற்றை தடுக்கிறது. இதிலுள்ள மக்னீசியம் நரம்புகளை அமைதிப்படுத்தி, நிம்மதியான மனநிலைமையை தருகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. ஆசிய பசுபிக் ஜர்னல் ஆஃப் டிராபிகல் மெடிசின் சமீபத்தில் நடத்தியிருந்த ஒரு ஆய்வில், புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த ஜாதிபத்திரிக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.
சருமத்துக்கு கவசம்போல காக்கிறது இந்த ஜாதிப்பத்திரிகள்.. தோலில் நிறம் மாறாமல் காப்பதுடன், பருக்கள், மங்குகள், கரும்புள்ளிகள், போன்றவற்றை நீக்கும் தன்மை இந்த ஜாதிப்பத்திரிக்கு உண்டு.
மனஅழுத்தம்: மன அழுத்தம், மன பதட்டம் போன்றவற்றிற்கு இந்த மூலிகை நிவாரணம் தருகிறது. நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இந்த மூலிகையில் உள்ளதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் காக்கிறது. உடல் எடை குறைப்பதிலும் பெரும்பங்கு ஜாதிப்பத்திரிக்கு உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், இதில் டீ தயாரித்து குடிக்கலாம்.
இதிலுள்ள கால்சியம், எலும்பு தேய்மானத்தை சரி செய்யக்கூடியது.. அத்துடன், பற்களுக்கும் வலிமை தரக்கூடியது.. மேலும், மூட்டுவலி, முழங்கால் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த ஜாதிப்பத்திரி அருமருந்து என்றே சொல்லலாம்.. அதனால், உணவில் ஜாதிபத்திரியை தயக்கமின்றி சேர்த்து கொள்ளலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், அழற்சி பிரச்சனை உள்ளவர்கள், இந்த ஜாதிப்பத்திரியை தவிர்க்கலாம்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications