Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பனங்கிழங்கில் கொட்டிக்கிடக்கும் ஆச்சரியம்.. பயனுள்ள பனங்கிழங்கு பவுடர் தெரியுமா? ஆணின் வரப்பிரசாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பனங்கிழங்கின் நன்மைகள் பலவிருந்தாலும், ஆண்களுக்கு இந்த கிழங்கு எந்த வகையில் உதவுகிறது தெரியுமா? அதென்ன பனங்கிழங்கு பொடி?

பனங்கிழங்கை பொறுத்தவரை, வைட்டமின் B, C நிறைந்த, பாதாமுக்கு இணையான சத்துக்களை கொண்ட கிழங்காகும். 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகளும், 77 கிராம் நீர்ச்சத்தும் உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த கிழங்கு பெருக்குகிறது..

Do you know the Excellent Health Benefits in Panankizhangu and Panam Kizhangu Palmrya Sprout is the Best for Men

ரத்த சோகை: ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்கள் பனங்கிழங்கை சாப்பிடுவதால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெருகும். நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.. இதனால், குடல் புழுக்கள் வெளியேறி, குடல் ஆரோக்கியம் பெருகும். ரத்தக் கொழுப்பு கட்டிகள் உருவாவதை தடுப்பதால், இதய நோய் வராமல் தடுக்க செய்கிறது இந்த பனங்கிழங்கு.

கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால், எலும்புகளுக்கு உறுதித்தன்மையை கூட்டுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பாதிப்புகள் குறைகிறது.. அதுமட்டுமல்ல, மெக்னீசியமும் இதில், இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மொத்தத்தில், ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகள் வராமல் தடுத்துவிடும்.

சர்க்கரை நோயாளி: நார்ச்சத்து நிறைந்த இந்த கிழங்கை, சர்க்கரை நோயாளிகளும் ஓரளவு சாப்பிடலாம்.. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது என்பது மட்டுமல்ல, பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

கருப்பை கோளாறுகளை நீக்க, பனங்கிழங்குகள் பேருதவி புரிகின்றன. இந்த கிழங்கை வேகவைத்து, தூளாக்கி அதில் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் கருப்பை வலுப்பெறும். அல்லது இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை உட்பட உடல் உறுப்புகள் பலம் அடையும்.

உருண்டை: பாதாம் பருப்பு இணையான சத்துக்களை உடைய கிழங்கு என்பதால், உடல் பலவீனமானவர்கள், இந்த கிழங்கை நறுக்கி, காயவைத்து இடித்து மாவாக்கி, அதனுடன், கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிட்டால் உடல் தேறும்.. ஆனால், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து மாவாக்கிவிட்டு, அதற்கு பிறகு சமைத்தால், மிகவும் நல்லது.

பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க எந்த வகைகளில் உதவுகிறது தெரியுமா? இந்த கிழங்கிலிருந்து தயாமின் என்ற ஒரு மூலக்கூறு தான், வயாக்ராவில் சேர்க்கப்படுகிறாம்.. எனவே, ஆணுறுப்பின் எழுச்சி அதிக நேர இருப்பதற்கும், அல்லது எழுச்சி இல்லாமல் இருக்கும் ஆணுறுப்பை தற்காலிகமாக எழுச்சி பெற வைப்பதற்கும் இந்த தயாமின் வேதிப்பொருட்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல, நீண்ட நேரம் விந்து வெளியேறாமல் இருக்கவும் இந்த பனங்கிழங்கு கூடுதலாகவே உதவுகிறது.

2 வகை கிழங்கு: கருப்பு நிற மற்றும் வெள்ளை நிற பனங்கிழங்கு என்று 2 விதங்கள் இந்த கிழங்கில் இருந்தாலும், இரண்டுமே ஒரே மருத்துவ குணத்தை பெற்றுள்ளன.. அதனால்தான், நாட்டு மருத்துவத்திலும் பனங்கிழங்குக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது..

விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது என்பதால்தான், இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு பனங்கிழங்கு ஏற்றுமதி நடக்கிறது. வெளிநாடுகளிலும் இந்த கிழங்கின் அருமை தெரிந்ததால்தான், மாத்திரைகளாக அவர்கள் தயாரிக்கிறார்கள்.

கிழங்கு மாவு: இந்த பனங்கிழங்கை வைத்து வீட்டிலேயே பொடி தயாரித்து பயன்படுத்துவார்கள். ஒரு பாத்திரத்தில் இந்த கிழங்கை சேர்த்து, பால் ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதை வெயிலில் காயவைத்து, பிறகு, மாவாக அரைத்து, சலித்து எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த பவுடரில் தினமும் 2 வேளை, பாலுடன் சேர்த்து 48 நாட்கள் செய்தாலே, ஆண்களுக்கு நல்லதாம். எனினும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இப்படி சூரணமாக, எடுத்து கொள்ளும்போது ஆரோக்கியம் தழைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+