மீன் முட்டை.. மீனைவிட சூப்பர்.. கோழிமுட்டையை விட பெஸ்ட் மீன் முட்டைகள்.. ஆச்சரியம் தரும் நன்மைகள்
சென்னை: மீன்களில் பல அரிய சத்துக்கள் உள்ளது என்றாலும், மீன் தலைகளையும், மீன் முட்டைகளையும் தவிர்க்கவே கூடாது என்கிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா?
பொதுவாக மீனை விரும்பி சாப்பிடும் அளவுக்கு மீன் தலையை பலரும் விரும்புவதில்லை.. தலையை வெட்டிவிட்டே, மீனை வாங்கி வருபவர்கள் பலர் உண்டு.

ஆனால், ஏகப்பட்ட வைட்டமின்களும், புரதங்களும், தாதுக்களும், ஆரோக்கியமான கொழுப்புகளும் இந்த மீன் தலைக்குள்தான் உள்ளன.. பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்களை குறைக்கும் தன்மை இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்ட உணவு வகைகளுக்கு உண்டு.. அது இந்த மீன் தலையிலும் நிறையவே உள்ளது.
மீன் தலைகள்: மீன் தலைகளை போலவே, மிக முக்கியமானது மீன் முட்டைகள்.. இந்த மீன் முட்டைகளையும் சமையலில் யாரும் பயன்படுத்துவதில்லை.. அதாவது கோழிமுட்டையை விட அதிகளவு ஊட்டச்சத்துக்களும், எதிர்ப்புச் சத்துக்களும் இந்த மீன் முட்டையில் உள்ளதாம்.. இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. மீனில் உள்ள சத்துக்களைவிட, மீன் முட்டையில்தான் நிறைய சத்துக்கள் இருக்கிறதாம்..
ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு பெரிதும் கை கொடுத்து உதவுவது இந்த இந்த மீன் முட்டைகள்தான்.. கால்சியம் நிறைந்த முட்டைகள், பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதியை தருகிறது. வைட்டமின் C, E, A நிறைந்த இந்த முட்டைகள், எலும்புகளை, பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது..
கொழுப்பு அளவு: ரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை குறைத்து, கொழுப்பின் அளவை அதிகரிப்பதையும் இந்த முட்டைகள் கட்டுப்படுத்துகின்றன... மீன் முட்டையில் திரவ வடிவிலான சுரப்பியில், வைட்டமின் E நிரம்பி உள்ளதால், கண் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க பேருதவி புரிகின்றன..
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், இதய நோயாளிகளுக்கும் நல்லது.. ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கும் நல்லது.. கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்களும் மீன் முட்டைகளை சாப்பிடலாம்.
ரிசர்வேஷன்: மீன் முட்டைகளின் மருத்துவ குணம் அறிந்தவர்கள், இதனை தவறவிடுவதில்லை. அதனால்தான், சில மீன் மார்க்கெட்டில், இந்த மீன் முட்டைக்கென்ற தனி கிராக்கி இருக்குமாம்.. அதாவது, ஒரு கிலோ மீன் 150 ரூபாய் என்றால், மீன் முட்டைகள் கிலோ, 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுமாம்..
சிலர், இந்த மீன்முட்டைகளை முன்கூட்டியே "ரிசர்வ்" செய்து வாங்குவார்கள்.. அந்த அளவுக்கு மவுசு நிறைந்த மீன் முட்டையை, வழக்கமாக கோழி முட்டையை போலவே, பொரித்து சாப்பிடலாம். பொடிமாஸ் செய்தும் சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications