மீனின் அற்புதம் அயிலை.. ஆயுளை கூட்டும் அயிலை மீன்.. இதய நண்பன் கானாங்கெளுத்தி.. "அந்த" பிரச்சனையும்
சென்னை: கானாங்களுத்தி என்று சொல்லப்படும் அயிலை மீன்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்? இதயத்துக்கு நன்மை தரக்கூடிய ஒருசிலவகை மீன்களில் அயிலையும் ஒன்று.. ஏன் தெரியுமா?
நம்முடைய உடலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் ஊட்டச்சத்தின் பெயர்தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்.. இந்த கொழுப்பு அமிலங்கள்தான், நம்முடைய உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

இதயம்: குறிப்பாக, நம்முடைய உடலில் ரத்தம் உறையாமல் பார்த்து கொள்வதில், இந்த அமிலங்களுக்கு பெரும் பங்கு உண்டு.. அதேபோல, இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும், மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இந்தக் கொழுப்பு அமிலம், அற்புத தீர்வாக அமைகிறது.. மேலும், மனச்சோர்விலிருந்து பாதுகாக்கக்கூடிய தன்மை இந்த ஒமேகா 3 அமிலங்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன..
இந்த கொழுப்பு அமிலங்கள் கலந்த உணவை சாப்பிடும்போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை அகலுகின்றன.. அதனால் ஏற்படும் பாதிப்புகளும் குறைகிறதாம். அவ்வளவு ஏன்? கண், காது சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளில், இந்த ஒமேகா 3 உள்ளது..
கொழுப்பு அமிலம்: அப்படிப்பட்ட ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இந்த அயிலை மீன்களில் நிறைந்துள்ளன.. கானாங்கெளுத்தி மீன்களையே அயிலை மீன்கள் என்பார்கள்.. ஒமேகா 3 என்ற சத்துக்கள் வழக்கமாக மீன்களில் இருக்கிறது என்றாலும், இந்த அயிலா மீனில் அளவுக்கு அதிகமாகவே நிறைந்துள்ளது என்கிறார்கள்.
இந்த கானாங்களுத்தி மீனின் ஒவ்வொரு 3-அவுன்சிலும் 20.2 கிராம் புரதம் இருப்பதால்தான், எப்போதுமே டிமாண்டு இருக்கிறது.. அதனால்தான், தமிழகத்தில் இந்த மீன் பிடிக்கப்பட்டாலும், கேரளாவுக்கு அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதியாகி கொண்டிருக்கின்றன.
முக்கியத்துவம்: புரோட்டீன் அதிகம் உள்ள அயிலை மீன்களை சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.. வைட்டமின்கள் B5, B6 பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், துத்தநாகம் போன்றவைகள் இதில் உள்ளன.. கார்போஹைட்ரேட் கிடையாது.. அதனால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த கானாங்கெளுத்தியை தாராளமாக சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் பாதிப்பு வருவதை தடுப்பதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் அயிலை மீன்கள் உதவுகின்றன. கானாங்கெளுத்தி மீனில், மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் D அதிகமாக உள்ளது.. எனவே, இதனை புற்றுநோய் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், வாழ்நாளின் ஆயுளை நீட்டிக்கலாம்...
குடல் புற்று நோய்: அதேபோல, குடல் புற்றுநோயுடன் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் கானாங்கெளுத்தியை சாப்பிட்டாலும் ஆயுள் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அயிலா போலவே, மத்தி, கவளையிலும் ஒமோகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது கூடுதலான தகவல்..
அதுமட்டுமல்ல, கானாங்கெளுத்தியில் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் உள்ளன.. இதைத்தவிர, சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மிகவும் குறைவு என்பதால்தான், அனைவராலும் தவிர்க்க முடியாத மீன்களாக இவைகள் உள்ளன.. அயிலை மீன்களில் மூட்டு பிரச்சனைகளை தடுக்கும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் உள்ளது.. எனவே, அடிக்கடி இந்த மீன்களை சாப்பிட்டு வந்தால், மூட்டு பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications