வாழைப்பழத்தில்.. இத்தனை விசேஷம் இருக்கா? "இவங்க" மட்டும் வாழைப்பழத்தை தொடாதீங்க.. பெஸ்ட் இதுதான்
சென்னை: வாழைப்பழங்கள் நல்லதா? வாழைப்பழங்களை அதிகம் சாப்பிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?
வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.. இதன்காரணமாகவே, பலரும் வாழைப்பழத்தை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால், வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை அறிந்தாலே அதன் மகத்துவம் தெரிந்துவிடும்..

வைட்டமின்கள்: வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன.. ஒரே ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது என்கிறார்கள்.
இந்த வைட்டமின் C, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.. மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வைட்டமின் B6 தருகிறது.. செரிமான ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள் தருகின்றன..
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தத்தை சீராக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை காக்கவும், இந்த பழத்திலுள்ள பொட்டாசியம் உதவுகிறது.. இன்னும் ஏகப்பட்ட சத்துக்களும், தாதுக்களும், இந்த பழத்தில் நிறைந்துள்ளன. குடல் இயக்கங்களை ஊக்குவித்து, குடல் பாதுகாப்புக்கு இந்த பழங்கள் உதவுகின்றன.. அஜீரணம், செரிமானம் உள்ளிட்ட வயிறு கோளாறுகள் சீராகின்றன..
வாழைப்பழங்களால் உடல் எடை கூடிவிடும் என்றாலும், இந்த பழங்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாம்.. முக்கியமாக, இதிலுள்ள நார்ச்சத்துக்களை தவிர்த்துவிட முடியாது.. அதனால், மருத்துவரின் ஆலோசனையுடன், டயட்டில் வாழைப்பழத்தையும் சேர்த்து கொள்ளலாம் என்கிறார்கள்..
மகிழ்ச்சி, தூக்கம்: வாழைப்பழம் சாப்பிடும்போது, சந்தோஷமான மனநிலைமை கிடைக்கிறது.. வாழைப்பழத்தில் மெலடோனின் என்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், தூக்கத்தை முறைப்படுத்த இது உதவுகிறது.. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் B6 சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது என்பதால், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இந்த வாழைப்பழங்கள் மிகவும் நல்லது..
ஆனால், அளவுக்கு அதிகமான வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.. இதனால், உடலின் எடை அதிகரிக்கும்... பொட்டாசியத்தின் அளவு காரணமாக தலைசுற்றல், வாந்தி, நாடித்துடிப்பு அதிகரித்தல் போன்ற உபாதைகளும் ஏற்படும்.. அதேபோல, பற்களில் ஓட்டைகள் விழலாம்.. எனவே, வாழைப்பழத்தை எப்போது சாப்பிட்டாலும், வாய் கொப்புளித்துவிட்டு தூங்குவது நல்லது என்கிறார்கள்.
கோளாறுகள்: வைட்டமின் பி6 உடலுக்கு அவசியம் என்றாலும், நிறைய அளவு சேரும்போது, நரம்பு பாதிப்பு ஏற்படலாம். அலர்ஜி, பக்கவிளைவும் ஏற்படலாம்.. அதேபோல, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். சிறுநீரகம் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும் என்பதால், இது ஆபத்தை விளைவிக்கும்.அதனால்தான், சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டுமாம்.
அதிலும் பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் நிறைய இருப்பதால், அதிகமாக சாப்பிடும்போது, வயிற்று வலி, மலச்சிக்கல் ஏற்பட்டுவிடும்.. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.
அலர்ஜி: ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் இருக்கிறதாம்.. குறிப்பாக, மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல், கலங்கிய கண்கள் போன்ற பொதுவான அலர்ஜிகள் ஏற்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications