சர்ருன்னு ஏறுதா வெயிட்? ஈஸியா உடல் எடை குறைக்கணுமா? வீட்ல தக்காளி இருக்கா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவும், முறையான தூக்கமும், நிம்மதியான மனநிலைமையும் அத்தியாவசியமானது.. அதேசமயம், எளிய முறையில், சூப் வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால், உடல் எடை குறைவதற்கு ஓரளவு உதவியாக இருக்கும்.. இது ஆரோக்கியமான முறையும்கூட.
உடல் எடை குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை.. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்..

Do you know the Excellent Health Benefits of Cauliflower and What soups can help you lose Weight

முருங்கைக்கீரை: அதாவது, முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்..

ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.
முருங்கை ஜூஸ்: மேலும், மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. ஆனால், 7 நாட்கள் இதை குடித்தபிறகு, ஒரு இடைவெளி விடவேண்டும்... அதேபோல, மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், குழந்தைகள் இந்த ஜூஸை குடிக்கக் கூடாது என்கிறார்கள்.

காய்கறிகள்: அடுத்ததாக காய்கறி சூப்களை தவறாமல் எடுத்து கொள்ளலாம்.. குறிப்பாக, முட்டைக்கோஸ் சூப், உடல் எடையை குறைக்க உதவுகிறது.. புரோட்டீன் நார்ச்சத்து, வைட்டமின்கள் K, C, B6, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளதால், எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

அடுத்ததாக, காலிபிளவர் அல்லது காளான் சூப்களை சாப்பிடலாம். ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஏராளமான நார்ச்சத்துக்கள், குறைந்த அளவு கலோரிகள், மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடியவை என்பதால், இந்த காய்களில் சூப் வைத்து குடிக்கலாம். அதேபோல, தக்காளி சூப் நிறைய சாப்பிடலாம்.. குறைந்த அளவு கலோரி உள்ளதுடன், குறைந்த அளவு கொழுப்பு உள்ளதால், தக்காளி சிறந்த சூப் வகையாக உள்ளது..

பயிறுகள்: முளைக்கட்டிய பயிறுகளிலும் சூப் வைத்து குடிக்கலாம்.. எந்த பயிரில் முளைகட்டினாலும், புரோட்டீன் அதிகமாகவே கிடைக்கும்.. எனவே, ஏதாவது ஒரு பயறை முளைகட்டி, வேகவைத்து எடுதது கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு பயிரை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பயறை, வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, வெண்ணெய், சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பயிறு விழுதையும் சேர்த்து, உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இறுதியில், தனியாக எடுத்து வைத்த பயறை, அதிலேயே கொட்டி கலக்கி, உப்பு, மல்லித்தூள் சேர்த்து இறக்கினால் முளைக்கட்டிய பயறு சூப் ரெடி. இது அவ்வளவும் புரோட்டீன் அடங்கிய சூப்பாகும். இதுபோலவே புரோட்டீன் அதிகமுள்ள சிக்கன் சூப்பையும் வாரம் 2 முறையாவது குடிக்கலாம்..

உடல் எடை: ஆனால், எந்த சூப்களை செய்தாலும், சர்க்கரை, உப்பு, கிரீம் இது எதுவுமே சேர்க்காமல் இருந்தால் கூடுதல் பலனை தரும். அல்லது குறைவான அளவு சேர்த்து கொள்ளலாம்.. அதேபோல, பட்டாணி, கேரட், மிளகு இந்த மூன்றையும் கண்டிப்பாக சேர்த்து கொள்ளும்போது, உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகின்றன.. கழிவுகளை வெளியேற்றவும் இவை உதவுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+