Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈர்க்குதே கறிவேப்பிலை.. அசால்ட்டா எடை, சுகர் குறையணுமா? தலைமுடி நிறைய வளரணுமா? பெஸ்ட் ஜூஸ் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கறிவேப்பிலைகளிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? உடல் எடையை குறைக்க கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன. வைட்டமின் C, A, B, E, அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு பல வகைகளில் நன்மை தருகின்றன.

Do you know the Excellent Health Benefits of Curry Leaves and what are the Best Leaf Weight Loss tips Tips

கறிவேப்பிலைகள், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.. காரணம், இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டுமாம். கணையத்தில் இன்சுலின் உற்பத்தியும் அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ரால்:
கறிவேப்பிலைகள் உடல் எடை குறைவோருக்கு நல்லது.. காரணம், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த இலை குறைக்கிறது.. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டுமாம். கறிவேப்பிலைகளை, எந்த வடிவில் உணவாக எடுத்து கொண்டாலும் நன்மையே.

கறிவேப்பிலையை நிழலில் காயவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.. தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவும் பலன்தரும். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை..2 கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி

இளநரை: கறிவேப்பிலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வர முடி வளருவதுடன், இளநரையும் சரியாகும்..

வெறும் வயிற்றில் 15 முதல் 20 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தாலே, வயிறு சுத்தமாகும்.. அஜீரண கோளாறு நீங்கும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.. ரத்தமும் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.. நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவும்.. இவ்வளவு பயன்தரக்கூடிய கறிவேப்பிலைகளை ஜூஸ் தயாரித்து குடிக்கும்போது, கூடுதல் பலன் கிடைக்கிறது..

கறிவேப்பிலைகள்: ஒரு கைப்பிடி அளவுக்கு கறிவேப்பிலைகளுடன் ஒரு கைப்பிடி புதினா அல்லது கொத்தமல்லி தழைகளை சேர்த்து, மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, வடிக்கட்டாமல் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நார்ச்சத்து உட்பட அன்றைய தினத்துக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைக்கும். தொப்பையும் மெல்ல குறைய துவங்கும்.

அல்லது கறிவேப்பிலைகளை நெல்லிக்காய்களுடன் சேர்த்து ஜூஸ் செய்யலாம்.. நெல்லிக்காய், இஞ்சி, மஞ்சள் துண்டு இவைகளை சுத்தமாக கழுவி, பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இவைகளை சேர்த்து, இதனுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையையும் சேர்த்து தண்ணீர் ஊற்ற அரைக்க வேண்டும். இதில் எலுமிச்சம் பழம் பிழிந்து குடிக்கலாம். இதனால் உடல் எடை வேகமாக குறையுமாம்.

பெஸ்ட் டயட்: அல்லது கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, மோருடன் கலந்து ஒருநாளைக்கு 2 முறை குடிக்கலாம். அல்லது ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணிநேரம் ஊறவைத்தும் குடிக்கலாம்.

எனவே, டயட்டில் இருப்பவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சரியான அளவில் கறிவேப்பிலையை எடுத்துக்கொள்வது சிறந்தது. அதுபோலவே அலர்ஜி உள்ளவர்கள், குழந்தை பெற்றவர்கள், கர்ப்பிணி பெண்கள் கறிவேப்பிலையை டாக்டர்களின் ஆலோசனை பெறாமல் அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+