தொப்பை தொங்குதா? முருங்கைக்காய் இருக்கே.. மூலநோய் முதல் மூட்டுவலி வரை ஓட்டும் முருங்கைக்காயின் மகிமை
சென்னை: முருங்கைக்காய்கள் எப்போதுமே உடலுக்கு நல்லதுதான் என்றாலும், கோடை காலங்களில் அதிகமாக சாப்பிட சொல்கிறார்கள் ஏன் தெரியுமா?
முருங்கைக்காயில் சத்துக்கள் நிறைய உள்ளன.. இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலுக்கு, சிறந்த தீர்வு முருங்கைக்காய்தான்

முருங்கைக்காய்: முருங்கைக்காயிலுள்ள பொட்டாசியச்சத்து, வாழைப்பழத்திலிருப்பதை விடவும் அதிகமாக இருக்கிறதாம்.. முருங்கைக்காயிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானதாக உள்ளதாம்.. முருங்கைக்காயிலுள்ள கால்சியம், பசும்பாலைவிட, 4 மடங்கு அதிகமாக உள்ளதாம். முருங்கைக்காயிலுள்ள வைட்டமின் சி, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகமாக உள்ளதாம்.
எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.. மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கு முருங்கைக்காய் அருமருந்தாகும்.
மூலநோய்: ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைக்கிறது. ரத்தமும், சிறுநீரும் சுத்தமாகும்.. மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.. முருங்கைக்காயை சமைக்கும்போது, இதன் விதைகளை குழந்தைகளுக்கு சாப்பிட தரலாம்.. காரணம், இந்த விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.. அதேபோல, இந்த விதைகளை மட்டுமே வைத்து நிறைய உணவுகளை நாமே தயாரித்து சாப்பிடலாம்.
அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை இருப்பதால், எலும்புகள் வலிமையடைய செய்கிறது. மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக முருங்கைக்காய் விளங்குகிறது.
நீரிழிவு நோயாளிகள்: ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான பயனாகும்.. அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் சர்க்கரை நோயாளிக்குக்கும் நன்மைகளை வாரிதருகிறது. கீல்வாதம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் செரிமான பிரச்சினைகளை இந்த மருத்துவ சிகிச்சைகளில் முருங்கைக்காய் பயன்படுத்தப்படுகிறது. முருங்கைக்காயில் வைட்டமின் C நிறைய உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.. நோய்த்தொற்றுகளை தடுக்கிறது.. அதேபோல, கொழுப்புகளும் குறைவு, கலோரிகளும் இந்த முருங்கையில் குறைவாகவே உள்ளன. இதனால், பசி உணர்வு கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை குறைய உதவுகிறது..
கோடை காலம்: கோடை காலங்களில் முருங்கைக்காய் சாப்பிட என்ன காரணம் தெரியுமா? முருங்கைக்காயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிரம்பியிருக்கிறது.. எனவே, இது கோடை வெப்பத்தின்போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க பெரிதும் துணைபுரிகிறது..
அதுமட்டுமல்ல, முருங்கைக்காய் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், நம்முடைய உடலில் ஏற்படும் திரவ இழப்பை சரிகட்டலாம். உடலும் நாளெல்லாம் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
மூலநோய்: இயற்கையிலேயே குளிர்ச்சித்தன்மை இந்த முருங்கைக்காய்க்கு உள்ளதால்தான், வெப்பமான காலநிலையில் உடலின் உட்புற வெப்பநிலையை தணிப்பதற்கு இதை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் வெயில் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை, சோர்வு, உடல் உஷ்ணம் போன்ற உஷ்ண கோளாறுகள் நீங்கிவிடும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications