வெந்தய விதை.. ஊறவைத்த வெந்தயத்தில் இதை மட்டும் சேருங்க.. நடக்கிற ஆச்சரியம் பாருங்க.. வெரிகுட் விதைகள்
சென்னை: விதை ஒன்றே போதும், உடலில் பல நன்மைகளை பெற்று தரும் என்றால், வெந்தய விதைகளை தவிர்க்கவே முடியாது.. உடல்எடை குறைப்பதில் வெந்தய விதைகளின் பயன்கள் என்னென்ன தெரியுமா?
வெந்தயத்தை பொறுத்தவரை, நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து என பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.. உடல்சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது வெந்தயம். சிறுநீரை பெருக்கக்கூடியது..

இந்த விதையிலுள்ள ஆல்கலாய்டுகள், ஜீரணத்தை தந்து, பசியை அதிகப்படுத்தக்கூடியவை.. நரம்புகளை பலப்படுத்தக்கூடியவை.. ஆனால், முளைக்கட்டி பயன்படுத்துவதால், வெந்தயத்தின் முழு பலனையும் பெற முடியும்,.
காற்றோட்டம்: 10 மணி நேரம் வெந்தயத்தை ஊறவைத்து, அதன் தண்ணீரை வடிகட்டி, மெல்லிய துணியில் 10 நேரம் மீண்டும் கட்டிவைத்து, காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்க விட வேண்டும். பிறகு, அடிக்கடி தண்ணீரை மட்டும் அதன்மீது தெளித்து வந்தாலே போதும், இப்போது முளை கட்டிய வெந்தயம் கிடைத்துவிடும்.
முளைகட்டி எடுத்துவிட்டாலே, இதன் கசப்பு தன்மை நீங்கிவிடும்.. மாறாக இனிப்பு சுவை வந்துவிடும். ஊற வைத்த வெந்தய தண்ணீரைகூட அப்படியே குடிக்கலாம். அல்லது தலைமுடியை அலசுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
நார்ச்சத்துக்கள்: முளைகட்டிய விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம்.. வைட்டமின் C, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், டயோஸ்ஜென் போன்ற சத்துக்கள் இந்த விதைகளில் உள்ளன.. 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. அதனால்தான், உடல் எடையை குறைக்க, இந்த விதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சாலட்களில், சூப்களில் இந்த முளைகட்டிய வெந்தய விதைகளை தூவி சாப்பிடலாம்.. அல்லது வெந்தய விதைகளை தேனில் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே உடல் எடையில் மாற்றம் தெரியுமாம். வெந்தயத்திலுள்ள காலக்டோமன் என்ற பொருள், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து, தேவையில்லாத கொழுப்புகள், சர்க்கரையை கரைக்க உதவுகிறது.. இதனால் விரைரவில் உடல் எடை குறையும்.
தாய்மார்கள்: பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த முளைகட்டிய வெந்தயம், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. இதனால், தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.. ஒரு ஸ்பூன் வீதம் முளைகட்டிய வெந்தயத்தை, டாக்டரின் ஆலோசனையுடன் சாப்பிட்டு வந்தாலே பெரும்பலன்கள் கிடைக்கும். மாதவிடாய் பிரச்சனை இருந்தாலும், இந்த முளைகட்டிய வெந்தயத்தை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.
முளைகட்டிய வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சல், தலைவலி போன்றவைகள் உடனடியாக குணமடையும்..
உள்ளுறுப்புகள்: உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் இந்த வெந்தய விதைகள் நலன் தருகின்றன.. தோலில் சுருக்கம் ஏற்படாமல், இந்த வெந்தயம் காக்கிறது.. சருமத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகளை நீக்கவும் இந்த விதைகள் உதவுகின்றன.. தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தால், இந்த வெந்தயத்தை அரைத்து பூசி, குளித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.
ஆனால், சரும அலர்ஜி இருப்பவர்கள், நாட்பட்ட மருந்து சாப்பிடுபவர்கள், பலவீனமான சிறுநீரகங்களை கொண்டவர்கள், மூலநோய் பாதிப்புள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையில்லாமல், முளைகட்டிய வெந்தயம் உள்ளிட்ட முளைக்கட்டிய பயிறுகளை சாப்பிட வேண்டாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications