மீனுடன் "இதை" சாப்பிடாதீங்க.. மீனில் 'அதை' சேர்க்காதீங்க.. தயிர் பிடிக்குமா? கீரை? அப்ப கவனமா இருங்க
சென்னை: ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கென்றே ஒரு முறை உள்ளது என்கிறது மருத்துவம்.. சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறது.. அந்தவகையில், எந்தெந்த உணவுடன், எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா?
பிரியாணியுடன் நாம் சேர்த்து சாப்பிடும் தயிர் பச்சடியே தவறு என்கிறார்கள் நிபுணர்கள்.. தயிர் உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், பிரியாணியை போலவே, வேறு சில உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.

வெங்காயம்: காரணம், தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் உஷ்ணத்தை தரக்கூடியது.. எப்போதுமே எதிரெதிர் குணங்கள் ஒன்றுசேர்ந்தால், அஜீரணம் உள்ளிட்ட தொந்தரவுகளை தந்துவிடுமாம்.. அசைவத்துடன் வெறும் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாமே தவிர, தயிருடன் கலந்து சாப்பிடுவதை மட்டும் தவிர்க்க சொல்கிறார்கள்.
அதுபோலவே, தயிருடன், மீன்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. எப்போதுமே தயிருக்கு செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு... அதனால்தான், சத்து அதிகமான மீனுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானத்தை சிக்கலாக்கிவிடுகிறது.. இதனால், சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். அதனால், மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிட்டால் நுல்லது.
கீரைகள்: தயிருடன் தயிருடன், கீரைகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், கீரைகளும் செரிமானம் ஆக நேரமாகும்.. இதனுடன் தயிர் சேரும்போது, கூடுதல் மந்தமாகிவிடும்.. தயிரும் கருவாடும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. தயிரும் மாம்பழமும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. அதுபோலவே, நல்லெண்ணெய்யில் இறைச்சியை சமைக்கக்கூடாது.. உஷ்ணமான சாப்பாடு சாப்பிட்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை சாப்பிடக்கூடாது..
முள்ளங்கியை மீனுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது.. இரண்டுமே அதிக சத்துக்களை தருகிறது என்றாலும், ஒன்றாக சாப்பிடும்போது, ஜீரண உறுப்புகளை மந்தமாக்கிவிடும்..
பீன்ஸ்: இறைச்சியுடன் வினிகரை சேர்த்து சமைக்கக்கூடாது.. பாலுடன் சாக்லெட்டை சேர்த்து சாப்பிடக்கூடாது. பீன்ஸுடன் பால், இறைச்சி, முட்டை, மீன், பழங்கள், சேர்த்து சாப்பிடக்கூரடாது.
பால் பொருட்களுடன் உருளைக்கிழங்கு, பீன்ஸ், இறைச்சி சாப்பிடக்கூடாது. பழங்களை தானியங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. பழங்கள், பால், இரண்டையும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது, உடல் உப்பசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, தேவையில்லாத நச்சுக்கள் வயிற்றில் சேர்ந்துவிடும்.












Click it and Unblock the Notifications