சர்க்கரை நோயாளி நெய் சாப்பிடலாமா? வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நடக்கும் ஆச்சரியம்.. அட்டகாசம்
சென்னை: வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாமா? முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் நெய் சாப்பிடலாமா? கூடாதா?
இயற்கையான அமினோ அமிலங்கள் உடைய இந்த நெய்யில், ஒமேகா 3, ஒமேகா கொழுப்பு அமிலங்களும் அடங்கியிருக்கின்றன.. எனவே, நெய் அனைவருக்குமே நல்லது என்கிறார்கள்..
உடல் எடை: உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை இந்த நெய் குறைப்பால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம்.. அதாவது, தினமும் காலையில் 5 முதல் 10 மிலி நெய்யை, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மெடபாலிக் அளவு அதிகரித்து, உடலுள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறிவிடும். ரத்த ஓட்டமும் சீராகும்.
நெய்யில் உள்ள ரசா என்ற சத்தானது, நம்முடைய உடலிலுள்ள செல்களை புத்துயிர் அடைய செய்கிறது.. மூளைகள் சிறப்பாக செயல்படுகின்றன.. நரம்பு மண்டலங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.. எலும்புகளின் மூட்டுகளில் இயற்கையான திரவம் உற்பத்தியாகிறது.. இது மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிவாரணமாக அமைகிறது.
தலைமுடி: தலைமுடியும் வலு பெறுகிறது.. தலைமுடி அதிகமாக கொட்டுபவர்கள், பலவீனமான தலைமுடி உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம். உடலிலுள்ள புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும், எதிர்ப்பு சக்தி இந்த நெய்க்கு உள்ளது.. சருமத்தில் இறந்த செல்களுக்கு, புத்துயிரை தருகிறது இந்த நெய். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்வதால், சொரியாஸிஸ் போன்ற தோல்நோய்களும் மட்டுப்படுகின்றன.
அதேசமயம், சர்க்கரை நோயாளிகள் நெய் சாப்பிடலாமா? என்ற சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.. நெய்யில் பால்மிடிக் அமிலம், ஒலிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.. இந்த அமிலங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறதாம்.. ஆரோக்கியமான கொழுப்பாகவும் நெய் கருதப்படுகிறது...
சத்துக்கள்: வைட்டமின் K, உள்ளிட்ட இதரஆன்டி-ஆக்சிடெண்டுகளின் மிகச்சிறந்த மூலமாக கருதப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது... நெய்யை சாப்பிடுவதால், குளுக்கோஸின் அளவு பெரிதாக பாதிக்கப்படாது என்கிறார்கள்.. அதனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நெய்யை உணவில் எடுத்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, கொழுப்பு நிறைந்த உணவை ஜீரணிப்பதை நெய் எளிதாக்குகிறது. இதனால், குடல் ஆரோக்கியத்தையும் தழைக்க செய்கிறது.. கால்சியத்தை உறிஞ்சுவதற்கு தேவைப்படும் வைட்டமின் D நெய்யில் உள்ளது கூடுதல் நன்மையாகும்..
உடல் எடை: அதேபோல, அதிக கார்போஹைட்ரேட் உணவுகளுடன், நெய்யை சேர்ப்பதால், கிளைசெமிக் குறியீட்டை குறைக்கிறது.. மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்க செய்யாது. எனவே, பதப்படுத்தப்பட்ட நெய்யை தவிர்த்துவிட்டு, பசும்பாலில் செய்யப்பட்ட சுத்தமான நெய்யை, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று நீரிழிவு நோயாளிகள் உணவில் சாப்பிடலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications