திராட்சைப்பழம்..கடவுளின் கனி தரும் மகத்துவம்..திராட்சை பழத்தை சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா? வாவ்
சென்னை: கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி என்ற திராட்சைப்பழம்... இதிலுள்ள சத்துக்கள் எந்த அளவுக்கு மனித குலத்துக்கு பயனளித்து கொண்டிருக்கின்றன தெரியுமா?
திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12, C போன்ற சத்துக்களும், பாஸ்பரஸ்,இரும்புச்சத்துக்களும் ஏராளமாக உள்ளன.. பித்தத்தை தணிக்கக்கூடிய சக்தி இந்த பழத்துக்கு உண்டு.. உடலில் ரத்தம் குறைவாக இருந்தால், அதற்கு இந்த பழம் கை கொடுத்து உதவுகிறது.. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.. புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது..

திராட்சை பழம்: கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது இந்த திராட்சைப்பழம்.. இதனால் தமனிகள் சுத்தமாகின்றன.. இந்த பழத்திலிருக்கும் ரெஸ்வெராட்ரோல் என்ற கலவையானது, இதய செயல்பாட்டுக்கு உறுதுணையாகிறது.. திராட்சையில் உள்ள சேர்மங்கள் லிப்பிட்களைக் கட்டுப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளதால், இதய நோய்களை நெருங்கவிடாமல் செய்கிறது.
பலவீன நரம்புகளை பலப்படுத்த திராட்சை உதவுகிறது.. இதன்காரணமாக, மூளையும், இதயமும் வலிமை பெறுகிறது.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், திராட்சைப்பழம் நம்முடைய சருமத்தை காக்கிறது.. இதிலுள்ள லைகோபீன் மற்றும் ரெஸ்வெராட்ரோல் இரண்டுமே தோலின் நிறத்துக்கு பொலிவை தருகின்றன.. சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்க உறுதுணையாக இருக்கின்றன..
உடல் எடை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நார்ச்சத்து நிறைந்த திராட்சையை தாராளமாக சாப்பிடலாம்.. அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம்போன்ற பிரச்சனைகளை போக்குகிறது இந்த பழம்.
திராட்சை பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதில்லை.. திராட்சையில் க்ளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதால், சாப்ப்பிட்ட உடனே உடனடியாகவே தெம்பு கிடைத்துவிடும். கிடைக்கும். அதுபோல, உடலில் ஏற்படும் உஷ்ண கோளாறுகளை இந்த பழம் தீர்க்கிறது.. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை சீராக்கி, தாராளமாக சிறுநீர் பிரிய உதவுகிறது.
விதைகள்: நன்மைகள் பலவிருந்தாலும், திராட்சையை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.. இந்த திராட்சையிலுள்ள சாலிசிலிக் அமிலம், உடலில் அதிகம் சேருவதால், இந்த விளைவுகள் வரக்கூடும்..
விதைகளுடன் திராட்சையை சாப்பிடும்போது, குடல் அழற்சி போன்றவை ஏற்படலாம்.. அஜீரணமும் ஏற்படலாம்.. கலோரிகளும், கொழுப்பு சத்துக்களும் அதிகம் என்பதால், நிறைய பழங்களை சாப்பிடக்கூடாது. இதனால், உடல் எடை கூடிவிடும்.
நிறைய திராட்சையை சாப்பிடும்போது, கர்ப்பப் பை சுருக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.. அதனால், கர்ப்பமான பெண்கள், மருத்துவரின் ஆலோசனையை பெறாமல் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது.












Click it and Unblock the Notifications