நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா "இவங்க" மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா?
மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய நிலக்கடலை.. இந்த நிலக்கடலையின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ரத்த நாளங்களை நிலக்கடலை பாதுகாக்கிறது.. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.. ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறது..

நிலக்கடலை: முதுமை தோற்றத்தை நீக்கி, இளமையை தக்கவைக்கிறது இந்த நிலக்கடலை. இதற்கு காரணம், வைட்டமின் C, E இரண்டுமே கடலையில் உள்ளதால், சருமத்துக்கு கவசம்போல பாதுகாக்கிறது.
சருமத்திலுள்ள காயங்களையும் குணப்படுத்தும் திறன் இந்த கடலைக்கு உள்ளது. . தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்க செய்கிறது. எலும்புகள் தேய்மான பிரச்சனை இருப்பவர்கள், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு நிலக்கடலை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
நரம்பு மண்டலம்: மாங்கனீசு, பாஸ்பரஸ், வைட்டமின் B1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுகிறது... ஞாபக சக்தியையும் பெருக்குகிறது.. புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் சக்தி இந்த நிலக்கடலைக்கு இருக்கிறது. இத்தனை நன்மைகள் இருந்தாலும், இந்த நிலக்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், நிலக்கடலையை குறைத்து கொள்ள வேண்டும்.. அலர்ஜி பிரச்சனை முதல் சுவாசம் பிரச்சனை வரை வரலாம்.. சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் நல்லது.
யாரெல்லாம் தவிர்க்கலாம்: சிலவகையான நோய்களில், நிலக்கடலையை சாப்பிட்டால், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, நோயாளியின் பிரச்சினைகளை இன்னும் அதிகரிக்க செய்துவிடுமாம்.. ஒருவேளை உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால், நிலக்கடலையை தவிர்த்துவிடலாம்.. இதனால், உடலில் அரிப்பு, வீக்கம், குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நிலக்கடலையை அதிகம் சாப்பிடக்கூடாது.. காரணம், இந்த நிலக்கடலையில் நிறைய சோடியம் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தை இன்னும் அதிகரிக்க செய்துவிடும்.. இதனால் இதயம் தொடர்பான நோய்களும் உருவாகிவிடும்.. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிலக்கடலையை அதிகமாக சாப்பிடக்கூடாது.
அதேபோல, ஓவர் வெயிட் இருப்பவர்களும் நிலக்கடலையை அதிகம் சாப்பிடக்கூடாது.. நிறைய கலோரிகளும், கொழுப்புகளும் உள்ளதால், உடல் எடை மேலும் அதிகரித்துவிடும்.. மூட்டு வலி உள்ளவர்களும் நிலக்கடலையை தவிர்த்துவிட வேண்டும். அசிடிட்டி பிரச்சனை இருந்தாலும், நிலக்கடலையை தவிர்க்கலாம்..
ஊறவைத்த நிலக்கடலை: எப்போதுமே நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி சாப்பிட சொல்கிறார்கள். இதனால், பித்தம் உடலில் அதிகம் சேராது.. அல்லது வேர்க்கடலையை கஞ்சியாக அல்லது வாழைப்பழம், தேன் சேர்த்து சாப்பிடுவதால், கூடுதல் பலம் கிடைக்கும். வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த நிலக்கடலை மிகவும் நல்லது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications