Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் பூ.. குறட்டை சத்தம் ஓவரா? செம்பருத்தி இருக்கா? லவங்கப்பட்டை? குறட்டை ஓடிரும்.. பெஸ்ட் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறட்டை விடுவதை தவிர்க்கவே முடியாதா? குறட்டையை தடுக்க இயற்கையான முறையில் வழிகள் உண்டா?

நாம் தூங்கும்போது தொண்டையிலிருக்கும் தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கும்போது, மூச்சு பாதையின் அளவு இயல்பாகவே குறுகிவிடும்.. தொப்பை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை வரும்.. ஆஸ்துமா நோயாளிகள், சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கும் குறட்டை வரும். குடிப்பழக்கம் நிறைய இருப்பவர்களுக்கும் குறட்டை வரும்..

Do you know the Excellent Health Benefits of Hibiscus and What are the Super home remedies to avoid snoring

குறட்டை: அளவுக்கு அதிகமான காரணம், கொழுப்பு, சாப்பிட்டு தூங்குபவர்களுக்கும் குறட்டை வரும்.. தொண்டையில், மூக்கில் சதை வளர்ச்சி இருந்தால் குறட்டை வரும். மூக்கு இடைச்சுவர் வளைவு காரணங்களினால் குறட்டை வரும்.. இந்த குறட்டையானது, இதயதுடிப்பில் தள்ளாட்டம், இதயத் தசைகள் வலுக்குறைவது, மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளில் கொண்டு சென்று, உயிருக்கே உலை வைத்துவிடும்.

குறட்டை விடும்போது சில சமயம் சத்தம் நின்றுவிடுவது போல, அல்லது மூச்சு திணறுவது போலிருக்கும். இப்படி அறிகுறி இருந்தால் இதயம், நுரையீரல், தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கலாம் என்றே அர்த்தம். அதனால், குறட்டை சத்தம் அதிகமாக இருப்பவர்கள், இதயநோய், நுரையீரல் நோய், தொண்டை நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாகி உள்ளார்களா என்பதை டெஸ்ட் செய்து கொள்வதுடன், உடனடியாக டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

தொண்டை சதைகள்: குறட்டை ஆரம்ப நிலையில் இருந்தால், இதற்கு நாம் எளிய முறையிலேயே தீர்வுகளை காணலாம்.. மல்லாந்து படுப்பதை தவிர்த்துவிட்டு, ஒரு பக்கமாக தூங்கினால் தொண்டை சதைகளின் தளர்ச்சி ஓளரவு குறைந்து குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.. ஒருவேளை சுவாச கோளாறுகள், மூக்கடைப்பு, சைனஸ் போன்றவவை இருந்தால், தூங்க போகும்போது, சுடுநீரில் மஞ்சள் தூள் சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

அதேபோல, சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் இந்த மூன்றையும் சமமாக பொடி செய்து, காலை, இரவு டீ போல போட்டு குடித்தாலும், குறட்டை கட்டுப்படும்.. லவங்கப்பட்டை, செம்பருத்தி பூ, கிராம்பு இவைகளை வைத்தும் டீ தயாரித்து குடித்தால், தொண்டை சதைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். அல்லது இரவு தூங்கும் முன்பு, ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் ஏலக்காய் பவுடரை கலந்து குடித்தால், குறட்டை குறையும்..

சுத்தமான நெய்: குறட்டையை கட்டுப்படுத்துவதில் நெய்க்கு நிறைய பங்கு உள்ளது.. தூங்கும் முன்பு, சுத்தமான நெய்யை லேசாக சூடுசெய்து, மூக்கில் ஓரிரு துளிகள் விட்டால் குறட்டை பிரச்சனை குறையும்.. நெய் போலவே, அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமுள்ள ஆலிவ் எண்ணெய்யும் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயில் தேன் கலந்து சாப்பிட்டு, தூங்க சென்றால், குறட்டை குறையும்.

நாட்டு மருந்து கடைகளில் குறட்டை பழம் கிடைக்கும். இந்த பழத்திலிருந்து எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். அதாவது ஒரு பாத்திரத்தில் குறட்டைப்பழச் சாறு 1 லிட்டர், 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். அதில், 20 கிராம் மிளகை இடித்து சேர்க்க வேண்டும். இந்த 3 பொருளையும் நன்றாக காய்ச்சி, அந்த எண்ணெய்யை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யில் வாரம் ஒருமுறை குளித்து வந்தாலும் பலன் கிடைக்கும்.

அனுலோம் விலோம் பிராணாயாமம் மற்றும் பிராமரி பிராணாயாமம் போன்ற ஆசனங்களும் குறட்டையை கட்டுப்படுத்த கைகொடுக்கிறது.

குழந்தைகள்: இதில் குழந்தைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.. குழந்தைகளுக்கு அடினாய்டு, டான்சிலைடிஸ் பிரச்சனைகள் இருந்தால், அதனால் ஏற்படும் தொண்டை சதையின் மூச்சு இறுக்கத்தாலும், நெஞ்சில் சளி கட்டியிருந்தாலும்கூட குறட்டை வரலாம்..இதற்கு கற்பூரவல்லி இலைச்சாற்றில் தேனை கலந்து குழைத்து தந்தால், டான்சில் வீக்கம் மெல்ல குறைய துவங்கும்.. அல்லது மிளகை தேனில் குழைத்து தந்தாலும், சைனஸ், டான்சிலைடிஸ், நெஞ்சு சளி, இருமல் போன்றவையும் குறையும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+