Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லி மாவு நல்லதா? புளித்த தோசை சாப்பிடறீங்களா? இட்லி சாப்பிட்டால் இது நடக்குமாமே.. அட தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்தியாவின் மிக முக்கியமான உணவாகிவிட்டது இந்த இட்லி.. அந்தவகையில், இட்லி மாவு உண்மையிலேயே நமக்கு ஆரோக்கியமானதா? உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இட்லி சாப்பிடலாமா? அப்படி அதில் என்னதான் சத்துக்கள் உள்ளன?

இட்லி மாவில் கலோரிகள் குறைவாகவே இருப்பதால், உடல் எடை குறைக்க நிறையவே உதவி செய்யும்... மேலும், இட்லியில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளதால், பசி உணர்வும் எடுக்காது. எளிதில் ஜீரணமாகும்..

Do you know the Excellent Health Benefits of Idli Flour and Supeer benefits of Idli Batter for weight loss

செரிமானம்: இந்த செரிமானத்துக்கு காரணம், இட்லி மாவு புளிக்கும்போது, புரோ பயாடிக்குகளை உருவாக்குகிறது.. செரிமானம் மேம்படவும், நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்தவும் இந்த புளிப்பு மாவு அவசியம்.

அதைவிட முக்கியமாக, நம்முடைய ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லிக்கு பெரும் பங்கு வகிக்கிறது... தசைகளை வலிமையடைய செய்கின்றன இட்லிகள்.. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தருகிறது. வாயு தொந்தரவு இருப்பவர்கள், தினமும் இட்லி சாப்பிடுவது சிறந்தது.. இதனால், வயிற்றிலுள்ள புண்கள் ஆறிவிடும்.

கொழுப்பு சத்துக்கள்: ஒரே ஒரு இட்லியில் மட்டும் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றனவாம்.. கொழுப்புச்சத்து இதில் கிடையாது. அந்தவகையில் இட்லி ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால், கொழுப்புச்சத்து இதில் இருக்க வாய்ப்பில்லை..

இட்லி சாம்பார் என இரண்டும் சேரும்போது, கூடுதல் சத்துக்கள் கிடைக்கின்றன.. அதாவது அரிசியிலிருந்து கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரோட்டீன் என இணைந்து கிடக்கிறது..

தேங்காய் சட்னி: வேக வைத்து சாப்பிடுவதால் கலோரிகள் இருப்பதில்லை.. ஆனால், இட்லி தட்டில் எண்ணெய், நெய், வெண்ணெய் தடவி இட்லியை சுடுவது அதிக கலோரிகளை தந்துவிடும். அதிலும், இட்லி, ஃப்ரைடு என்பது கூடுதல் கலோரி உடையது.. போதாக்குறைக்கு இட்லிக்கு தேங்காய் சட்னி போன்றவை சேரும்போது, கூடுதல் கலோரிகள் சேர்ந்துவிடும்.

ஒரு துண்டு தேங்காயில் மட்டுமே 160 கலோரிகள், 15 கிராம் கொழுப்பு இருக்கிறதாம்.. அதுவும், இட்லி மிளகாய்ப் பொடி + எண்ணெய், + நெய் தோசை இவைகளை எல்லாம் கணக்கில் எடுக்கவே முடியாது. போதாக்குறைக்கு, இட்லி + வடை சேர்த்து சாப்பிடுவது அதற்கு மேல் கலோரிகளை தந்துவிடும். அதிலும் எண்ணெய்யில் பொரித்த வடை, இட்லியுடன் சேர்த்து சாப்பிடுவது கலோரிகளை கூட்டிவிடும்.

ஒருவேளை, அரிசியினால் உடல் பருமனடைவது போல் தெரிந்தால், கோதுமையை கொண்டு இட்லி செய்து சாப்பிடலாம். இது செரிமானத்திற்கு இன்னும் நல்லது.

பாசி பருப்பு: பொதுவாக, நீரிழிவு நோயாளிகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை குறைத்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, புரோட்டீன், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளலாம். எனவே, பெரும்பாலும் இட்லிக்கு சாம்பார் போன்ற பருப்பு சேர்த்த உணவைகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக, பாசிப்பருப்பு, சோம்பு சேர்த்து சாம்பார் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்..

இப்படி இட்லி சாப்பிடும்போது, இரும்புச்சத்து நிறைந்த உணவாக மாறிவிடுகிறது. இதனால், ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜனேற்றம் கிடைக்கிறது.. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையே அதிகம் உண்டாகிறது..

நீரிழிவு நோயாளிகள்: எனவே, நீரிழிவு நோயாளிகள் அரிசி இட்லி என்றால் 2, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி என்றால் 3 சாப்பிடலாம். ரவா கலந்து செய்யும் இட்லியில், சிறிது கேரட் சேர்த்து கொள்ளும்போது, கூடுதல் சுவையும், ஆரோக்கியமும் கிடைக்கிறது. அதேபோல, அரிசியினால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும் என்பதால், கோதுமை இட்லியை சேர்த்து கொள்ளலாம்.

ஆனால், தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி இரண்டையும் தவிர்க்க சொல்கிறார்கள். இவைகளுக்கு பதிலாக, புதினா கொத்தமல்லி சட்னி, சாம்பார் போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+