கமலாப்பழம்.. இதய நண்பன் "கமலா ஆரஞ்சு".. கருமையை போக்கும் ஆரஞ்சுப்பழம்.. கர்ப்பிணியின் காவலன் கமலா
சென்னை: சளி பிடிக்கும் என்று சொல்லி சொல்லியே, இந்த கமலாப்பழத்தை பலரும் ஒதுக்கி விடுகிறார்கள்.. உண்மையை சொல்லப்போனால், காய்ச்சலின்போதும் ஜூஸ் போட்டு குடிக்கக்கூடிய ஒரே பழம் இந்த கமலாப்பழம்தான்.
ஆரஞ்சு பழத்தைத்தான் கமலா பழம் என்பார்கள்.. வைட்டமின் A, C, B, B1, B2 ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இந்த கமலாப்பழத்தில் உள்ளன..

ஆரஞ்சுப்பழம்: முக்கியமாக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ள பழம் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் இந்த பழத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
கமலாப்பழத்தில் உள்ள வைட்டமின் C, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால், சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்னைகளை தவிர்க்கும் திறன் இந்த கமலாப்பழத்துக்கு உண்டு. இந்த வைட்டமின் C சத்துக்களானது, நம்முடைய உடலிலுள்ள செல்களை பாதிக்கும் "ஃப்ரீ ராடிக்கல்ஸ் என்ற பொருளைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.. இதனால் செல்களின் ஆரோக்கியம் காக்கப்படுகின்றன.,
புற்றுநோய்: புற்றுநோய் ஏற்படாமல் காக்க செய்கிறது இந்த பழம்.. தினமும் கமலாப்பழம் சாப்பிட்டு வந்தாலே, பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைகிறதாம். இதில் நிறைய பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள்ளும் வைத்திருக்க உதவுகிறது.. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்தி, முடி வளரவும் வழி வகுக்க செய்கிறது.
பித்தம் அதிகமாக இருப்பவர்கள், சாப்பாட்டுக்கு பிறகு கமலாப்பழம் சாப்பிட்டு வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.. கர்ப்பிணிகளுக்கு வாந்தி உணர்வுகள் இருந்தால், இந்த கமலாப்பழ சாற்றை லேசாக சூடு செய்து, சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.. காய்ச்சி ஆறவைத்த தண்ணீரில், இந்த பழத்தில் ஜூஸ் செய்தும் சாப்பிடலாம். இதனால் சளி பிடிக்காது.. காய்ச்சலாக இருக்கும்போது, குடிக்கக்கூடிய ஒரே ஜூஸ் இதுதான்.
செரிமானம்: நார்ச்சத்து நிறைந்த இந்த கமலாப்பழம், செரிமானத்துக்கு தூண்டுகோலாகிறது.. குடலை சுத்தம் செய்கிறது.. கொழுப்பையும் குறைக்கிறது.. தேவையற்ற கலோரிகளையும் எரிக்கிறது. இதனால், உடல் எடை குறைக்க தாராளமாகவே பயன்படுத்தலாம்.
மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களை நெருங்க விடாமல் செய்து, இதயத்திற்கு நன்மை தரக்கூடிய பழங்களில் இந்த கமலாப்பழம் மிக முக்கியமானது.. உடல் சூடு, சிறுநீர்கடுப்பு, மூல வியாதி இப்படி உஷ்ண பிரச்சனைகளுக்கும் கைகொடுக்கிறது.. சிறுநீர் கோளாறுகள் இருந்தாலும், இரவில் அரை டம்ளர் கமலாப்பழம் ஜூஸ் குடித்தாலே நிவாரணம் கிடைக்கும்.
சரும நோய்கள்: சருமத்தில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை தவறவிடக்கூடாது.. சருமத்தை மென்மையாக வைத்திருக்க தூண்டுகிறது கமலாப்பழம்.. அதனால்தான் அழகுசாதன பொருட்களின் பல தயாரிப்புகளில் கமலாப்பழம் சேர்க்கப்படுகிறது.... கமலா ஆரஞ்சுச்சாறு, தக்காளிச்சாறு, பசுநெய் இந்த மூன்றையும் முகத்தில் தடவி வந்தால், கருமை நிறம் மறைந்து முகம் பிரகாசமடையும்..












Click it and Unblock the Notifications