காராமணி.. கடகடன்னு வெயிட் குறையுது பாருங்க.. கர்ப்பிணிகளின் வரப்பிரசாதம்.. காராமணிகளின் மகத்துவம்
சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, பயத்தங்காய், தட்டைப்பயிறு என்று சொல்லப்படும் காராமணி பெஸ்ட் தீர்வு.. இதற்கு காரணம் என்ன தெரியுமா?
காராமணியில், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, என சத்துக்கள் உள்ளன..
வைட்டமின் C நிறைந்த காராமணி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை உடையது..

எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பயறு முக்கிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதற்கு காரணம், காராமணியில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பினை சீராக்குகிறது..
கல்லீரல்: காராமணியை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள் நெருங்குவதில்லை.. எனவே, ஈரலை தாக்கும் மஞ்சள் காமாலை நோய்களும் நம்மை அண்டுவதில்லை. கோலின் என்ற வைட்டமின் B உள்ளதால், கல்லீரல்களில் நோய்களை உண்டாக்குவதில்லை.
உயர் ரத்த அழுத்த நோய் பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டிய உணவு இந்த காராமணி ஆகும். காரணம், பக்கவாதம், மாரடைப்பு, போன்ற பயங்கரங்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்கப்பட்டுவிடும். ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்களை முற்றிலுமாக ஒழித்துவிடும். அதிலும், குடல் புற்றுநோய்களை எதிர்க்கும் பண்புகள் இந்த காராமணிக்கு நிறையவே உள்ளது..
காராமணி: அபரிமிதமான கால்சியம் காராமணியில் உள்ளதுடன், மெக்னீசியம், மாங்கனீசு சத்துக்கள் உள்ளதால், எலும்புகளின் பாதுகாப்பிலும், பற்களின் உறுதித்தன்மைக்கும் பேருதவி புரிகிறது.
தசைகளுக்கு புரோட்டீன் தேவையாக உள்ளது.. எலும்புகளுக்கு கால்சியம் தேவையாக உள்ளது.. அதனால்தான், உடலின் தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. இதிலுள்ள ஆண்டி ஆக்சிடென்ட்டுகள், சருமத்தை கவசம் போல காக்கின்றன.. தோல் சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன..
காராமணி: தூக்கம் சரியாக வராமல் அவதிப்படுபவர்கள், கொஞ்சம் காராமணியை சாப்பிட்டுவிட்டு தூங்க முயற்சிக்கலாம். ஏனென்றால், டிரிப்தோபன் என்ற சத்து இந்த பயிரில் நிறைந்துள்ளது.. இதனால் உடலில் உள்ள சோர்வை நீக்கி, தூக்கத்தையும் தூண்ட செய்கிறது.
உடல் எடை குறைவதில் காராமணி ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா? இந்த பயறு நீர்த்தன்மை நிறைந்தது.. நார்ச்சத்து நிறைந்தது. இதனால் உடம்பில் தேங்கியிருக்கும் நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்றிவிடுகிறது..
மதிய உணவு: உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ளலாம்.. அரை கப் காரமணியில் 1 கிராம் கொழுப்பு மட்டுமே இருப்பதால், இதை உணவில் தாராளமாக சேர்க்கலாம். வெறுமனே காராமணியை வேகவைத்து, வெங்காயம், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறையுமாம்.
உடலிலுள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை கொண்டது இந்த காராமணி.. குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். உடல் சூட்டை தணிப்பதுடன், பித்தம், கபம் அளவினையும் குறைக்க உதவுகிறது..
கர்ப்பிணிகள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஃபோலேட் என்ற இரும்புச்சத்து நிறைய தேவையாக உள்ளது.. அது இந்த காராமணியில் நிறையவே உள்ளது. கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவதால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவும். கர்ப்பிணிகள், மட்டுமல்ல, பாலூட்டும் தாய்மார்களும், வளரும் குழந்தைகளும் கட்டாயம் சாப்பிட வேண்டிய பயறு இதுவாகும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications