ஒல்லி ஒல்லியா ஆகணுமா? இந்த கஞ்சியை ட்ரை பண்ணுங்க. யோசிக்க முடியாத அளவுக்கு வெயிட் குறையும்.. செமல்ல
சென்னை: உடல் எடையை குறைக்க எத்தனையோ வகையான வழிமுறைகள் உள்ளன.. எத்தனையோ வகையான உணவு முறைகளும் உள்ளன.. அதில், பெரிதும் பலன் கொடுக்கக்கூடிய 2 வகையான கஞ்சிகளை பார்ப்போம்.
டியட்டில் இருப்பவர்கள் அல்லது உடல்எடையை நிர்வகிக்க முயற்சிப்பவர்கள், பெரும்பாலும் ஓட்ஸ் கஞ்சியை எடுத்து கொள்கிறார்கள்.. இதனால், உடல் எடை குறையலாம் என்றும்பலரும் நினைக்கிறார்கள்.

ஓட்ஸ் கஞ்சி: ஆனால் ஓட்ஸ் தட்பவெப்பநிலைக்கு ஏற்றது இல்லை என்கிறார்கள்.. தேவைப்பட்டால், ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் தோசையாக செய்து சாப்பிடலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இப்படி கஞ்சியாக ஓட்ஸ் குடிக்கும்போது, உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறதாம்.. அதேபோல, கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுவதாலும், உடல் எடை குறையாது என்கிறார்கள்.. காரணம், இவையெல்லாம் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை...
கொள்ளு பயிறு: சிலவகை தானியங்களில் கஞ்சி செய்து சாப்பிடும்போது, உடலுக்கு வலு கிடைப்பதுடன், உடல் எடை குறையவும் துணைபுரிவதாக சொல்கிறார்கள்.. அதில் ஒன்றுதான் கொள்ளு பருப்பு
இந்த கொள்ளு பருப்பில் எப்படி கஞ்சி செய்வது தெரியுமா? கொள்ளுவை லேசாக வறுத்து, கொரகொரப்பாக பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து உப்பு கலந்து வேகவிட வேண்டும். நன்றாக கொதித்ததும், பூண்டு, சீரகம் இரண்டையும் தட்டி போட வேண்டும். இறக்கும்போது கொத்தமல்லி இலைகளை தூவினால் கஞ்சி ரெடி.
கருப்பு கவுனி: அதேபோல, கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட்டால், சத்துக்கள் இரு மடங்காகிறது.. காரணம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் நிரம்பிஉள்ளன. அதனால்தான், உடல் எடையை குறைப்பவர்களின் கவனம், இந்த கருப்பு அரிசி பக்கம் திரும்பி உள்ளது.
கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள், இந்த கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்த்துக்கொண்டால், எளிதில் கட்டுப்படுத்தலாம்... செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னை, வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை என அனைத்தையுமே இந்த அரிசி தீர்ப்பதால் கல்லீரல் ஆரோக்கியம் பெறுகிறது.
எப்படி தயார் செய்வது: இந்த வகை அரிசியில் நார்ச்சத்து மட்டுமே அதிகம் உள்ளதால், கொஞ்சம் சாப்பிட்டாலும், வயிறு நிரம்ப சாப்பிட்ட உணர்வைத் தந்துவிடுகிறது.. வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது இந்த அரிசியை எடுத்து கொள்ளலாம்.. அந்த கஞ்சியை எப்படி தயார் செய்வது தெரியுமா?
ஒரு டம்ளர் அரிசியை, 3 முறை நன்றாக கழுவி, 12 டம்ளர் தண்ணீரை சேர்த்து, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். குக்கரில், 1 ஸ்பூன் எண்ணெய், சீரகம், 5 மிளகு, 5 பல் பூண்டு, 10 - 15 நறுக்கிய சின்ன வெங்காயம், 100 கி பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், ஊற வைத்த அரிசி, பிறகு, அரிசியின் அளவில் 5 மடங்கு தண்ணீர் கூடுதலாக சேர்த்து வேகவிட வேண்டும்.
உடல் எடை: 10 அல்லது 12 விசில் வரை விட்டு குக்கரை இறக்கி, உப்பு சேர்த்து கொள்ளலாம். அதிக நேரம் கருப்பு கவனி அரிசியை வேக வைத்தாலும் ருசி அதிகமாகவே கிடைக்கும்.. அதேபோல, இந்த பொருட்கள் எதுவுமே இல்லாமல், வெறும் கருப்பு அரிசியை மட்டும் தனியாக வேக வைத்தும் கஞ்சி செய்யலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications