Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டை பாக்கு.. கொட்டிக்கிடக்குது ஆச்சரியம்.. சூப்பர் பலன்.. ஆனாலும் ஒரு கண்டிஷன்.. என்னன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிலை + சுண்ணாம்புடன் சேர்க்கப்படும் கொட்டை பாக்குகள் தவிர்க்க முடியாதவை.. இந்த கொட்டை பாக்குகளின் நன்மைகள் என்ன? எல்லாருமே இந்த கொட்டை பாக்குகளை சாப்பிடலாமா?

உணவு சாப்பிட்டதுமே, வெற்றிலை போடும் பழக்கம் இன்றளவும் நம்முடைய தமிழகத்தில் உள்ளது.. காரணம், செரிமானத்தை சீராக்கக்கூடிய தன்மை இந்த பாக்குகளுக்கு உண்டு.

Do you know the Excellent Health Benefits of Kottai Pakku and Super Uses of Betel nuts for Diabetics

துவர்ப்புச்சுவை கொண்ட பாக்குகள், மிகச்சிறந்த மலமிளக்கியாக உள்ளன. கழிவுகளையும், நச்சுக்களையும், நீக்கி குடலை சுத்தப்படுத்தக்கூடியது.. இயற்கையான கால்சியம் சத்துக்கள் நம்முடைய உடலில் சேரவும் உதவுகிறது.

கிருமிகள்: கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை இந்த பாக்குகள்.. குறிப்பாக, இரைப்பையில் உள்ள தொற்றுகளை அகற்றக்கூடியவை.. பற்கள் உறுதியாக இருக்க வேண்டுமானால், கொட்டை பாக்கை சுட்டு பவுடராக்கி, அதில் பற்களை தேய்த்து வந்தால் போதும்.

கானா வாழைக்கீரையுடன் கொட்டைப்பாக்கு சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்தியம் நன்றாக இருக்கும் என்பார்கள். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில்தான் இவைகளை எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல, இரைப்பையில் உள்ள கிருமிகளும் நீங்கும்.

பற்கள்: கொட்டை பாக்கை தூளாக்கி பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்றும் உறுதியாகவும் திகழும். பித்தம் அகிமாக உள்ளவர்கள், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணும்போது பித்தம், வாதம் இரண்டுமே கட்டுக்குள் வந்துவிடும். காரணம், பாக்கில் உள்ள துவர்ப்பு சத்துதான், பித்தத்தை கட்டுக்குள் வைக்க முக்கிய காரணமாகும். துவர்ப்பு நிறைந்த இந்த கொட்டை பாக்கில் டீ தயாரித்து குடிப்பார்கள்.. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது..

இப்படி சில நன்மைகளை பாக்குகள் தந்தாலும், கெடுதலைதான் அதிகம் தருகிறதாம். இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் அண்ட் பீடியாட்ரிக்ஸ் ஆன்காலஜி டிரஸ்டட், அமெரிக்கன் சொசைட்டி ஃபார் க்ளினிக்கல் நியூட்ரிஷியன் போன்ற ஆய்வுகளில் இந்த பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன

நன்மைகள்: ஆனால், இந்த கொட்டை பாக்குகள் நன்மைகளை தருவது போலவே, சில தீங்குகளையும் உடலுக்கு தரலாம் என்கின்றன ஆய்வுகள். அதாவது, நாம் வெற்றிலை போடுவதற்கும், வாய், உணவுக்குழாய் புற்றுநோய்க்கும் நிறைய தொடர்புகள் உள்ளனவாம். முக்கியமாக ஃபைப்ரோஸிஸ்க்கு வாய்ப் புற்றுநோய்க்கு அதிக ஆபத்து இருப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன.

அதேபோல, இதய நோய், உடல் பருமன் போன்றவற்றுக்கும் தொடர்பு கொண்டுள்ளதாம். சிலருக்கு கொட்டை பாக்கு பயன்படுத்தும்போது, வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக நோய், இதய நோய், குறைந்த ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், போன்றவை ஏற்படலாம் என்கிறார்கள்.. இது மாரடைப்பு, கோமா வரை கொண்டுபோய் விட்டுவிடுவாம்.

சிக்கல்கள்: நீண்ட காலமாகவே பாக்கு பயன்படுத்துபவர்களுக்கு இப்படியான சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. எந்நேரமும் கொட்டைப்பாக்கை மென்றால், பல் ஈறுகள் பாதிக்கப்படும்.. பற்கள் கறை படிவதுடன், ஈறுகளும் வலுவிழந்துவிடும். அதேபோல, கொட்டை பாக்குகளை தொடர்ந்து சாப்பிட்டால், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம் என்கிறார்கள்..

கர்ப்பிணிகள் கொட்டை பாக்குகளை தொடவே கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் இதை தவிர்க்கலாம்.. வலிப்பு நோயாளிகள் இதய கோளாறுகள் உள்ளவர்களும், ரத்த அழுத்த பிரச்சனை பிரச்சனை உள்ளவர்களும், கொட்டை பாக்குகளை தவிர்க்கலாம்..

நுரையீரல்: அதேபோல, நுரையீரலுக்கும் தீங்கு தரக்கூடும் என்பதால், ஆஸ்துமா நோயாளிகளும் கொட்டைப்பாக்கு சாப்பிடக்கூடாது. மற்றவர்களும் இந்த பாக்குகளை நிறைய சாப்பிடக்கூடாது.. ரத்தசோகை வந்துவிடுமாம். எனவே, வெற்றிலையுடன் மிக குறைந்த அளவில் பாக்குகளை எடுத்து கொண்டால், அது சிறந்த மருந்தாகும்.. இல்லையேல் நஞ்சாகிவிடும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+