குப்பைமேனி தழை.. தேங்காய் எண்ணெய் போதுமே.. உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கும்.. வேற லெவல் குப்பைமேனி
சென்னை: சருமத்துக்கு கவசம் போல பாதுகாக்கக்கூடியது குப்பைமேனி.. இந்த இலைகளை வைத்து எண்ணெய் தயாரிக்கலாமா? குப்பை மேனி தைலத்தின் பயன்கள் என்னென்ன தெரியுமா?
சளி, இருமல், தொண்டை வலி, தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் போன்ற பிரச்சனைக்கு, குப்பை மேனி சாற்றுடன் சுண்ணாம்பு கலந்து பூசினால் குணமாகும். குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்று புழுக்கள் வெளியேறிவிடும்.
சுடுநீர்: சளியை இளக்கி வெளியேற்றும் குணம் குப்பைமேனிக்கு உண்டு என்பதால், இந்த இலையை பொடி செய்து, ஒரு கிராம் அளவு சுடுநீரில் கலந்து குடித்தால் தீர்வு கிடைக்கும். தலைவலியால் அவதிப்படுபவர்கள், குப்பைமேனியை அரைத்து சாற்றை மட்டும் எடுத்து நெற்றியில் பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும்.

குப்பைமேனி இலைச்சாற்றை வெந்நீரில் கலந்து குடிக்கும்போது, மலச்சிக்கல் தீர்வாகிறது.. அன்றைய தினங்களில், பாம்பு கடிக்கு விஷ முறிவாக இந்த குப்பைமேனியைதான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.. குப்பை மேனிக்கீரைக்கு உடல் அழகை கூட்டுவதில் முக்கிய பங்கு உள்ளது.. மேனியை பளபளப்பாகும் குணம் கொண்டது இந்த கீரைகள்.. தோலில் சொறி, சிரங்கு, புண், கரும்புள்ளிகள் போன்றவற்றை விரட்டக்கூடியது இந்த குப்பை மேனிக்கீரை..
காயங்கள்: இந்த இலைகளுடன் மஞ்சள், கல் உப்பு சேர்த்து மை போல அரைத்து உடலில் பூசி குளித்து வந்தாலே கரும்புள்ளிகள் மறைந்து, சருமஅழகு கூடும். தோல்நோய்கள், நோய்த்தொற்றுகள், காயங்கள் போன்றவற்றுக்கு குப்பை மேனி எண்ணெய் பயன்படுகிறது..
இந்த எண்ணெய்யை தயாரிக்க, குப்பைமேனி இலைகளை மிக்ஸியில் விழுதுபோல அரைத்து, அதன் சாற்றை வடிகட்ட எடுத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் ரெடி: இப்போது ஒரு வாணலில் இந்த சாற்றை கொட்டி, சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, அத்துடன் சிறிது மஞ்சளையும் கொட்டி கொதிக்கவிட வேண்டும். எண்ணெய் கொதித்து சத்தம் அடங்கும்வரை விட்டு, அடுப்பை நிறுத்திவிட வேண்டும். இப்போது இந்த எண்ணெய்யை ஆறவைத்து எடுத்து வைத்து கொண்டால், எண்ணெய் ரெடி.
அதேபோல, குப்பைமேனி தைலம் தயாரிக்கலாம். குப்பைமேனி இலைகள் 2 கைப்பிடி எடுத்து கழுவி, மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் - 250 மி.லி, விளக்கெண்ணெய் - 3 ஸ்பூன் இரண்டையும் சேர்த்து கலந்து, அதில், இந்த குப்பைமேனி விழுதையும் கொட்டி கொதிக்கவிட வேண்டும். 30 நிமிடம் அடுப்பை குறைத்து வைத்து, அணத்துவிட வேண்டும். இந்த தைலத்தையும், சரும நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications