வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்
சென்னை: வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா?
புரோட்டீன், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் C, B1, B2, B6, B9 சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு வெண்டைக்காய் போல சிறந்த உணவு வேறில்லை..

எதிர்ப்பு சக்திகள்: எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த காயை, உடல் எடை குறைப்போரும் பயன்படுத்தலாம். காரணம், 100 கிராம் வெண்டைக்காயில், வெறும் 35 கிலோ கலோரிகள் இருக்கிறதாம்..
ஞாபக ரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு வயிற்றுப்புண், பார்வை குறைபாடு இன்னும் ஏகப்பட்ட நோய்களை இந்த வெண்டைக்காய் தீர்க்கிறது.
வழவழ காய்: வெண்டைக்காயின் ஸ்பெஷாலிட்டியே அதன் வழவழப்புத்தன்மைதான்.. ஆனால், பலருக்கும் அந்த வழவழப்பு பிடிப்பதில்லை. அந்த வழவழப்பு இருப்பதாலேயே நிறைய பேர் வெண்டைக்காயை தவிர்த்து விடுவார்கள். சிலர் அந்த வழவழப்பு போகும்வரை வெறும் வாணலில் வதக்கிவிட்டு, அதற்கு பிறகு சமையலுக்கு வெண்டைக்காயை பயன்படுத்துவார்கள்.
உண்மையை சொல்லப்போனால், அந்த வழவழப்புத்தன்மையில்தான், வெண்டைக்காயின் மொத்த மருத்துவ பலன்களும் மறைந்திருக்கிறதாம்.. முக்கியமாக, நார்ச்சத்து இந்த வழவழப்பில்தான் உள்ளது.. அல்சர், வயிற்றுப்புண் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த வழவழ நார்ச்சத்து மருந்தாக உதவுகிறது..
மலச்சிக்கல்: வெண்டைக்காயிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்கு காரணமாக உள்ளது. பெக்டின் + கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு, பித்த நீர் அதிகரிக்காமல் தடுக்கச் செய்துவிடுகிறது. அத்துடன், மலச்சிக்கல் பிரச்சனையையும், வயிறு உபாதைகளையும் இந்த வழவழ வெண்டைக்காய்தான் போக்குகிறது.
அளவுக்கு அதிகமான ஆண்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள வெண்டைக்காயில், கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம்.. இந்த நார்ச்சத்துக்கள்தான் கொலஸ்ட்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன.. வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் C, ஆஸ்துமாவை விரட்டக்கூடியது.. வெண்டைக்காயிலுள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கக்கூடியது.. இந்த ஃபோலிக் அமிலம்தான், கர்ப்பிணிகளுக்கு மிகவும் தேவையான சத்துக்களாகும்.
நோயாளிகள்: ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காயை நறுக்கி சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த இந்த தண்ணீரை குடித்து வந்தால், நீரிழப்பு தடுக்கப்படுவதுடன், உடல் குளுமை பெறும்... எலும்பு நோய் வராது.. எலும்புகளின் அடர்த்தியும் அதிகமாகும்.
அதேசமயம், வெண்டைக்காயில் ஆக்சலேட் நிறைய உள்ளதால், சிறுநீரகம், பித்தப்பை கற்களை வளர செய்துவிடும். அதனால், எவ்வளவு நன்மைகளை தந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கெடுதிதான்.. அதேபோல, அதிகமாக வெண்டைக்காயை வதக்க கூடாதாம்.. அப்படி வதக்கினால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிவிடுமாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications