குண்டு மாங்கா.. கல்லீரலின் காவலன்.. இதய நண்பன்.. பச்சை மாங்காயில் ஆச்சரியங்கள்.. மாங்காயின் மகிமை
சென்னை: மாம்பழத்தை விரும்பும் அளவுக்கு மாங்காய்களை பலரும் விரும்புவதில்லை.. உண்மையை சொல்லப்போனால், மாம்பழத்தைவிட, மாங்காய்களில்தான் சத்துக்கள் அதிகம்..!!
மாங்காயில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. உடலிலுள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் திறன் இந்த மாங்காய்க்கு உண்டு. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், உட்பட பல சத்துக்கள் இந்த மாங்காயில் உள்ளன.. மாம்பழத்தைவிடவும், மாங்காயில், கலோரிகள் மிகவும் குறைவு.. மாம்பழத்தை விடவும், மாங்காயில், நார்ச்சத்துக்கள் அதிகம்.

உடல்எடை: பொதுவாக, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், மாம்பழத்தை சாப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால், உடல் எடை குறைக்க நினைத்தால், கட்டாயம் மாங்காயை டயட்டில் சேர்த்து கொள்ளலாம்..
காரணம், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாங்காயை சாப்பிட்டு வரும்போது, உடலின் பிஎம்ஐ அளவு குறைவாக இருப்பதும், இடுப்பு சுற்றளவும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுப்பதுடன், கொழுப்பையும் குறைக்க வல்லது. உடலிலுள்ள கொழுப்பின் அளவை மாங்காய்கள் கட்டுப்படுத்துகின்றன.. எனவே, டயட் எடுக்கும்போது, சாலட்களில் இந்த மாங்காயை தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
அஜீரணம்: அஜீரண பிரச்சனை இருப்பவர்கள், அசிடிட்டி பிரச்சனை, வாந்தி, குமட்டல் இருப்பவர்கள், இந்த மாங்காயை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.. மலச்சிக்கல் இருப்பவர்கள், மாங்காயை உப்பு மற்றும் தேனில் தொட்டு சாப்பிட்டால், தீர்வு கிடைக்கும்..
மேலும், இதய பிரச்சனைகளை மாங்காய் தீர்க்கின்றன.. கால்சியம் அதிகம் உள்ள மாங்காய், பற்களையும், எலும்புகளையும் வலுவாக்குகிறது.. ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிப்பதோடு, புதிய ரத்த அணுக்களின் உற்பத்திக்கு இந்த மாங்காய் உதவுகிறது. அதனால்தான், ஈறுகளில் ரத்தக்கசிவு இருந்தால், மாங்காயை சாப்பிடுவார்கள். இதனால், ரத்தக்கசிவு உடனே நின்றுவிடும்.. பற்களுக்கு வெண்மையும் கிடைக்கும். வாய் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு மாங்காய் சிறந்தது.. மாங்காயை தயிருடன் சேர்த்து பச்சடி போல சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
கல்லீரலுக்கு இந்த மாங்காய் மிகவும் நல்லது.. மாங்காயை சாப்பிடும்போது, கல்லீரலில் பித்த உற்பத்தி அதிகரிக்கும்.,. இந்த பித்த திரவத்தின் உற்பத்தியானது, கல்லீரலில் படிந்திருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.. அதேபோல, கல்லீரலில் படிந்துள்ள பித்தத்தையும், கல்லீரலை சுற்றியிருக்கும் கொழுப்புகளையும் வெளியேற்றிவிடுகிறது. மொத்தத்தில், மாங்காய் சாப்பிட்டு வருவதால், பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் எங்காவது பாக்டீரியல் தொற்றுகள் இருந்தாலும் அவையும் சீராகிவிடுகின்றன.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டிருப்பதால், புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கவும், புற்று வராமல் தடுக்க மாங்காய் தூண்டுகோலாகிறது..
சரும ஆரோக்கியம்: மாங்காய் சாப்பிட்ட வருபவர்களுக்கு வியர்க்குருக்கள் வருவதில்லை.. வெயில் காலத்தில் வியர்க்குரு பிரச்சனைக்கு மட்டுமல்ல, வியர்வை பிரச்சனைக்கும் இந்த மாங்காய் தீர்வு தருகிறது.. உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறினால், மாங்காயை ஜூஸ் செய்து குடித்தால், வியர்வையிலிருந்து தப்பிக்கலாம்.. வியர்வை மூலம், சோடியம் குளோரைடு மற்றும் இரும்புச்சத்துக்கள் உடலிலிருந்து வெளியேறுவதையும் தடுக்கலாம்.
தலைமுடி வளர்ச்சையை மாங்காய்கள் உறுதி செய்கின்றன.. வைட்டமின் A, C, உட்பட மக்னீசியம் சத்துக்கள் மாங்காயில் உள்ளதால், சரும ஆரோக்கியமும், தலைமுடி ஆரோக்கியம் இரண்டுமே காக்கப்படுகிறது.
தலைமுடி வளர்ச்சி: சருமத்துக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை மாங்காய் தூண்டுகிறது.. இதனால், தலைமுடி வறட்சியடையாமல் நீர்ச்சத்துடன் காக்கப்படுகிறது. பச்சை மாங்காயை பேஸ்ட்போல அரைத்து, தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.. இந்த பேஸ்ட்டுடன் பன்னீருடன் கலந்து முகத்துக்கும் பேஸ்பேக் போல பயன்படுத்தலாம்..
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications