மத்தி மீன்கள்.. வாரம் ஒருநாள் மத்தி மீனை சாப்பிட சொல்றது இதுக்குதான்.. சாளை மீன்களின் சூப்பர் சிறப்பு
சென்னை: சாளை எனப்படும் மத்தி மீன்களில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? வாரம் ஒருநாள் மட்டுமே மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
வெறும் 100 கிராம் மத்தி மீனில், புரதச்சத்து -20.9 கிராம், கொழுப்பு- 10. 5 கிராம், சாம்பல் சத்து 1.9 கிராம் நீர்ச்சத்து- 66.7 கிராம், வைட்டமின் B12, D, கால்சியம், செலினியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஜிங்க், நியாசின், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில், வைட்டமின் B12, D என்ற இந்த 2 சத்துக்களும் மத்தி மீன்களின் சிறப்பு என்று சொல்லலாம்..

ஆரோக்கிய நன்மைகள்: நம்முடைய மூளை 60 சதவீதம் கொழுப்பால் ஆனது என்பதால், மத்தி மீன்களை தவிர்க்க முடியாது.. காரணம், மூளைக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் இந்த மீன்களில் அதிகமாகவே காணப்படுகிறது.
மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது என்றாலும், இந்த மத்தி மீனில் சற்று அதிகமாகவே உள்ளது.. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மனசோர்வு இல்லாமல் வைக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.. மற்ற இறைச்சியை சாப்பிட பிடிக்காதவர்கள், இந்த மத்தி மட்டுமே சாப்பிட்டு வந்தாலே போதும், இரும்புச்சத்துடன் சேர்த்து மற்ற சத்துக்களையும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அனீமியா பிரச்சனை உள்ளவர்களுக்கு மத்தி மீன் ஒரு வரப்பிரசாதம் எனலாம்..
மீன்கள்: பொதுவாக சிறிய வகை மீன்கள் என்றாலே, அது இதயத்துக்கு நல்லது என்பார்கள்.. அந்தவகையில், இதய நோய் அபாயம், மாரடைப்பு அபாயம், புற்றுநோய் அபாயம் போன்றவற்றை தடுக்கக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது இந்த மத்தி மீன்கள்.. இதனால், கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகிறது..
அந்தவகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு மத்தி மீன் நன்மை பயக்கிறது என்றே சொல்லலாம்.. மத்தி மீன்களை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வருவதால், சர்க்கரை நோயின் அபாயமும் குறைவதாக ஆய்வுகளில் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், மீனில் அடங்கியிருக்கும் அபரிமிதமான புரோட்டீன் தான்.. இந்த புரோட்டீன்தான், இன்சுலின் எதிர்ப்பை குறைப்பதில் பெரும் பங்கை வகிக்கிறது.
பாதரசம்: கர்ப்பிணி பெண்கள், வாரம் ஒருமுறையாவது மத்தி மீனை சாப்பிட வேண்டுமாம்.. காரணம், இந்த மீன்கள்ல நச்சுக்கள் மிகவும் குறைவு.. பாதரசம் மிகவும் குறைவு.. எனவே, வயிற்றிலுள்ள குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பான உணவாக உள்ளது..
மத்தி மீனிலுள்ள கால்சியமும், இரும்புச்சத்தும், குழந்தைக்கு தேவையானதாக உள்ளது.. ஒவ்வொரு வாரமும் 12 அவுன்ஸ் கடல் உணவுகளை உட்கொள்ளுமாறு கர்ப்பிணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றாலும், வாரத்திற்கு 2 முறை மத்தி மீனை நன்றாக சமைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது என்கிறார்கள்..
கர்ப்பிணிகள்: அதேபோல, மெனோபாஸ் காலங்களில் ஆஸ்டியோபெராசிஸ் என்ற எலும்பு அடர்த்தி குறைபாடு வரலாம்.. இவைகளை தடுக்கவும், மத்தி மீனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து கொள்வது நல்லது என்கிறார்கள்..!!
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications