மட்டன் செய்றீங்களா? ஆட்டுக்கறியில் இதை மறக்காதீங்க.. ஈர்க்கும் ஈரலில் இத்தனை நல்ல விஷயமா? பிரமாதம்
சென்னை: உடலுக்கு கெடுதி என்று சொல்லியே, ஆட்டுக்கறியை பலரும் ஒதுக்கிவிடுகிறார்கள்.. அதுவும் சத்து நிறைந்த ஈரலை முழுமையாக ஒதுக்க தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், இந்த ஆட்டுக்கறியை தொட்டுக்கூட பார்க்க கூடாது. இதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

மட்டன்: ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், வளரும் குழந்தைகள், இளைஞர்கள் போன்றோர், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால் உடம்பில் பல சத்துக்கள் கிடைக்கும்.. உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும். எனவே, ஆட்டுக்கறியைவிட, அதன் உறுப்புகளே சத்துக்கள் நிரம்பியவை என்று சொல்வார்கள்.. அதில் ஒன்றுதான் ஆட்டு ஈரல்.
100 கிராம் ஆட்டு கல்லீரலில், கலோரிகள் 217.95 கி. புரதம் 16.97 கிராம், கொழுப்பு 13.77 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1.42 கிராம், கார்போஹைட்ரேட்டுகள் 6.17 கிராம், நார்ச்சத்து 1.96 கிராம், சோடியம் 51.08 மிகி, பொட்டாசியம் 390.21 மி.கி, கால்சியம் 38.54 மி.கி, இரும்பு 5.83 மி.கி, துத்தநாகம் 3.05 மி.கி போன்றவை நிறைந்துள்ளவை.
சத்துக்கள்: இந்த 100 கிராம் கல்லீரலில், வைட்டமின் A, B, B9, C, D, D3, K, B12, கரோட்டினாய்டுகள், பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், செலினியம் போன்ற ஏகப்பட்ட தாதுக்களின் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன..
கலோரிகள் குறைவாக உள்ள இந்த ஈரலில் கொழுப்புச் சத்து மிக அதிகம். ஆட்டு கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது.. கல்லீரல் உடலுக்கு வலிமை தரும். அனீமிக் பிரச்சனை இருப்பவர்கள், மாதம் 2 முறையாவது, ஈரலை சமைத்து சாப்பிடுவதால், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.. நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் பலப்படுகிறது.
எலும்பு: நமக்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும் உண்டாகக் கூடிய அமினோ அமிலம், இந்த கல்லீரலில் இருக்கிறது.. தசை நிறை பராமரிப்பு, திசு சரிசெய்தல், ஹார்மோன் உற்பத்தி, தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது... கல்லீரலில் விட்டமின் "B" உள்ளதால், மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாகும். உடலின் எலும்பு அடர்த்தியையும் அதிகரிக்க செய்கிறது.. உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்கள், இந்த ஆட்டு ஈரலை பலத்தை தருகிறது..
கர்ப்பிணி பெண்கள், ஆட்டு ஈரலை சாப்பிட்டுவந்தால் கருவிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்... ஆனால், அதிக A வைட்டமின் உள்ளதால், கர்ப்பிணிகள் ஆட்டு ஈரலை தவிர்க்கவேண்டும்.. அல்லது டாக்டர்களின் முறையான ஆலோசனை பெறாமல் ஈரலை சாப்பிட வேண்டாம்..
எவ்வளவுதான் நன்மைகளை தந்தாலும், எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான்.. அந்தவகையில் கல்லீரல் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், பல ஆபத்தான நோய்களை கொண்டுவந்து விட்டுவிடும்.
கல்லீரல்: முழு ஆரோக்கியம் நிறைந்தவர்கள், மாதம் ஒருநாள் அல்லது 2 நாள் வீட்டிலேயே, குறைந்த மசாலா, குறைந்த எண்ணெய் சேர்த்து சமைத்து குறிப்பிட்ட அளவில் சாப்பிடலாம்.. அல்லது உப்பு, மஞ்சள் சேர்த்து வேகவைத்து சாப்பிடலாம்.. ஆனால், எப்போது ஈரலை எப்போது செய்தாலும், அதனுடன் இஞ்சி - பூண்டு இரண்டையுமே அதிகமாக சேர்த்து சமைக்க வேண்டும்..
ஒருவேளை உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், மட்டன் கல்லீரலை 419 கிராம் அளவே உணவில் எடுத்து கொள்ள வேண்டுமாம்.. அப்படியே எடுத்துக்கொண்டாலும், முறையான உடற்பயிற்சியை செய்ய வேண்டும்... எனவே, குறைந்த அளவில் முழுமையான சத்துக்கள் கொடுக்கக்கூடிய ஒரே அசைவம் என்றால் அது இந்த, ஆட்டு ஈரல் மட்டும்தான்....!!












Click it and Unblock the Notifications