ஆட்டுக்கறி செய்றீங்களா? மட்டனை வாங்கினால் இதை விட்றாதீங்க.. சூப்பரான ஆட்டுக்கால் சூப்.. இது பெஸ்ட்
சென்னை: ஆட்டுக்கால் சூப் நல்லதா? அப்படி என்னதான் அந்த சூப்பில் சத்துக்கள் உள்ளன? ஆட்டுக்கால் சூப் ஏன் குடிக்க வேண்டும்?
பொதுவாகவே சூப்கள் நம்முடைய உடலுக்கு நல்லது.. காரணம், சூப்களை குடிக்கும்போது, உடம்பிலிருக்கும் என்சைம்கள் தூண்டப்படுகின்றன.. இதனால், செரிமானமும் எளிதாகும், அசிடிட்டியும் குறையும், பசியும் நன்றாக எடுக்கும். பசியை தூண்டிவிடும் தன்மை சூப்களுக்கு இருப்பதால்தான், ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு முன்பு சூப் பரிமாறப்படுகிறது.

காய்கறி சூப், மூலிகை சூப், அசைவ சூப்கள் என பலவகை இருந்தாலும், அடிப்படையில் இவை எல்லாமே செரிமானத்துக்கு உதவுபவைதான்.. வைட்டமின்களும், ருசியும் நிரம்பி கிடப்பவை. பூண்டு, மஞ்சள் தூள், மிளகுதூள் என சூப்பில் சேர்க்கப்படும் அத்தனை பொருட்களும் செரிமானத்துக்கு உதவுபவை.
சத்துக்கள்: கோழிக்கறி சூப் எடுத்துக் கொண்டால், புரதச்சத்து, கொழுப்புச் சத்து அதிகம் நிறைந்தவை.. மட்டன் சூப் எடுத்துக் கொண்டால், நெஞ்செலும்பு என்று சொல்லப்படும் மார்க்கண்டம், ஆட்டுக்கால் என தனித்தனி வகைகளில் சூப் செய்யப்படுகிறது..
இரும்புச்சத்து, B12 போன்ற சத்து நிறைந்த சூப்கள் என்றாலும், கொழுப்பு சத்தும் இவைகளில் அதிகம்.. அதனால், அளவுக்கு அதிகமாக மட்டன் சூப்களை குடிக்க கூடாது..
ஆட்டுக்கால் சூப்: ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவது, ஆண்களுக்கு மிகவும் சக்தியையும், பலத்தையும் தருகிறது. கலோரி கட்டுப்பாட்டை இந்த ஆட்டுக்கால் சூப் ஊக்குவிக்கிறது. மூட்டுவலி, முழங்கால் வலி, முதுகுவலி, மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஆட்டுக்கால் சூப் நல்லது.. அத்துடன் இதய தசைகளையும் பலப்படுத்தக்கூடியது.
கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவைகளுடன், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் என எண்ணற்ற சத்துக்களின் ஆதாரமாக இந்த ஆட்டுக்கால் சூப் விளங்குகிறது.. இதனால், உடம்பிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் நீங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் சீராக்குகிறது.. இதனால், இதயநோய், நீரிழிவு அபாயமும் குறைக்கப்படுகிறது.
என்ன காரணம்: காரணம், இந்த ஆட்டுக்கால் சூப்பில் குறைந்த அளவிலான கலோரியும், ஊட்டச்சத்தும், அதிக அளவிலான புரோட்டீனும் உள்ளது.. இந்த சூப்பில் ஜெலட்டின் இருப்பதால், பசி உணர்வை அடக்குகிறது. இதனால், எடை இழப்புக்கும் வகை செய்கிறது.
இந்த கால் எலும்புகளினால், கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க செய்கிறது. இந்த கொலாஜன் நம்முடைய சருமத்துக்கு பாதுகாவலனாக திகழ்கிறது.. பெரும்பாலும், ஆட்டுக்கால் சூப்களை, காலை 11 மணிதான் சூப் சாப்பிட்டால், செரிமானத்தை தூண்டி அடுத்த வேளைக்கான உணவு எடுத்துக்கொள்ள நம்மை தயார்படுத்துமாம்.
தீர்வுகள்: சளி இருமலுக்கு ஆட்டுக்கால் போல சிறந்த தீர்வு இருக்க முடியாது.. எலும்புகளை வலுவடைய செய்யும் திறன் இந்த ஆட்டுக்கால் சூப்புக்கு உண்டு.. இந்த சூப்பில் அர்ஜினைன் என்ற விசேஷ பொருள் இருப்பதால், கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது.. நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதற்கு, இந்த ஆட்டு கால் பெரிதும் பெரிதும் துணைபுரிகிறது.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களும் இந்த ஆட்டுக்கால் சூப்பினை குடிக்கலாம்.. காரணம், இதிலுள்ள கிளைசின் என்ற அமினோ அமிலம், உடலில் உள்ள உணர்வு நரம்புகளை தளர்வடையச் செய்கிறது.
குறைந்த அளவு: ஆனால், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், ஆட்டுக்கால் பக்கம் வரவே கூடாது.. டாக்டர்களின் ஆலோசனையை பெறாமல், ஆட்டுக்கால் சூப் குடிக்கவும் கூடாது.. எவ்வளவுதான் சத்துக்கள் இருந்தாலும், ஆரோக்கியமானவர்களும், ஆட்டுக்கால் சூப்களை குறைந்த அளவு எடுத்து கொள்வதே நல்லது.. அளவுக்கு மிஞ்சினால் எதுவானாலும் நஞ்சுதானே?
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications