மட்டன் செய்றீங்களா? ஆட்டுக்கறி செய்தால் இதை விட்றாதீங்க.. எக்கச்சக்க கொலாஜின்.. அட்டகாச மார்க்கண்டம்
சென்னை: கொலாஜன் என்பது என்ன தெரியுமா? இந்த கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய சைவ, அசைவ உணவுகள் என்னென்ன தெரியுமா?
நம்முடைய உடலில் இருக்கும் ஒரு வகையான புரதத்தின் பெயர்தான் கொலாஜன்.. நம்முடைய சருமத்தில் சுருக்கங்களை தராமல் காக்ககூடிய புரதம் இது.. முக சுருக்கத்தை சரி செய்ய உதவுவதுதான் இந்த கொலாஜன்..

எலும்புகள்: எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதைகளில் இந்த கொலாஜன் உற்பத்தியாகிறது.. சரியான முறையில், சரியான உணவை மேற்கொள்ளும்போது, இந்த கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க இந்த கொலாஜன் உதவுகிறது.. சருமம் ஈரப்பதத்துடன் திகழ இந்த கொலாஜன் உதவுகிறது..
இந்த கொலாஜன் உற்பத்தி உடலில் குறையும்போது, சுருக்கங்கள் உட்பட பல தொந்தரவுகள் உடலில் ஏற்படுகிறது.. இந்த கொலாஜனை குறையாமல் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.. இதற்காக, மாய்சரைஸர்கள், லோஷன்களில், மாத்திரைகளில் கொலாஜன் கிடைக்கிறது என்றாலும், இதையெல்லாம் மருத்துவர்களின் ஆலோசனை பேரிலேயே எடுத்து கொள்ள வேண்டும்.
காய்கறிகள்: ஆனால், இயற்கை முறையிலேயே, சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமே கொலாஜன் உற்பத்தியை நம்மால் அதிகப்படுத்தி கொள்ள முடியும்.. அரிசி, மைதா, கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்புகள், வெள்ளை சர்க்கரை இதையெல்லாம் சாப்பிடும்போது, நம் உடலில் உள்ள கொலாஜன் உற்பத்தி அளவு குறைந்துவிடுமாம்..
அதனால், அதற்கு பதிலாக, காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், தக்காளி, பூண்டு போன்றவற்றிலும், ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, கொய்யா போன்ற பழங்களிலும் கொலாஜன் அதிகமாக கிடைக்கும்.
சோயாவிலும் கொலாஜன் அதிகம் உள்ளது. சருமத்தின் வயதாவதற்கு வழிவகுக்கும் என்சைம்களை இந்த சோயா தடுக்கிறது. அசைவ உணவுகளில், முட்டையின் வெள்ளைக்கரு, மீன்களை சாப்பிடும்போதும் இந்த கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். அதைவிட முக்கியமாக ஆட்டுக்கால் சூப்பில் நிறைய கொலாஜன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மார்க்கண்டம்: அதேபோல மார்கண்டம் என்று சொல்லக்கூடிய ஆட்டின் விலா எலும்பு பகுதியிலும் கொலாஜன் கிடைக்கும்.. இந்த எலும்புகளை நன்றாக வேக வைக்கும்போது, எலும்பு மஜ்ஜையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளிப்பட்டு அதுதான் நமக்கு முழுமையான சத்துக்களாக கிடைக்கின்றன.. இதில், கொலாஜன் தவிர, குளுட்டமைன், புரோலின், கிளைசின், காண்ட்ராய்டின் சல்பேட் போன்றவை நிறைந்துள்ளதால், மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் பலம் கிடைக்கிறது.
கொலாஜன் இந்த எலும்பு சூப்பில் நிரம்பி உள்ளதால், நம்முடைய சருமத்துக்கும், தலைமுடி, தோல், நகங்களுக்கும் வலு தருகிறது.. தலைமுடிகள் பலம் பெறுகின்றன.. சரும சுருக்கங்கள் மெல்ல மெல்ல விலகுகின்றன..!!












Click it and Unblock the Notifications