ஓமவல்லி இலை.. நுரையீரலின் நண்பன்.. கற்பூரவல்லி கஷாயம் ஒன்னு போதுமே.. வியப்பை அள்ளி தரும் ஓமவல்லி ஜூஸ்
சென்னை: ஓமவல்லி என்று சொல்லக்கூடிய மூலிகையை குழந்தைகளுக்கு எப்படி தர வேண்டும் தெரியுமா? கற்பூரவல்லி கஷாயம் எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?
ஓமவல்லி இலைகளுக்கு கற்பூரவல்லி என்றம் பெயர்.. வைட்டமின் C , A போன்ற ஊட்டச்சத்துக்கள் இந்த இலையில் உள்ளன.. நுரையீரல் பிரச்சனையை எளிதாக தீர்க்கக்கூடிய மருந்தாக இது உதவுகிறது..

செரிமான பிரச்சனை: செரிமான பிரச்சனை முதல் சரும பிரச்சனைகள் வரையுள்ள கோளாறுகளுக்கு எளிய தீர்வை இந்த இலைகள் தருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இந்த ஓமவல்லி இலைகள், முழங்கால் வலி, மூட்டுவலி முதல், கீல்வாதம்வரை மருந்தாகிறது.
சளி, இருமல், கபம், வறட்டு இருமல், தொண்டடை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற அனைத்துவகையான சுவாச கோளாறுகள் தீர, ஓமவல்லி இலைகள் வரப்பிரசாதமாக உள்ளன.. இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அகலும்.
ஓமவல்லி: அல்லது தலையில் நீர் கோர்த்துவிட்டால், ஓமவல்லி இலையை பறித்து விழுதுபோல அரைத்து, அதை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும். இதில், சிறிது ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் தலை பாரம் நீங்குவதுடன், மொத்த சளி தொந்தரவும் தீரும்.. இந்த இலைகளை கொண்டு, ஆவி பிடித்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
ஆனால், குழந்தைகளுக்கு ஓமவல்லி இலையை மருந்தாக தரும்போது, கவனத்துடன் தர வேண்டுமாம்.. மார்ச்சளி இருந்தால், ஓமவல்லியிலிருந்து சாறு பிழிந்து, அதில் சர்க்கரை கலந்து தருவார்கள். அல்லது தேனுடன் கலந்து தந்தாலும் நலன் கிடைக்கும்..
குழந்தைகள்: இதனால், குழந்தைகளின் கெட்டிப்பட்ட சளி முதல் இருமல் வரை தீரும்.. மார்பு சளியும் கட்டுக்குள் வரும். குழந்தைகளுக்கு அஜீரணம், சளி, இருமல் தீரவும் இந்த ஓமவல்லியை பயன்படுத்தலாம். கற்பூரவல்லி கஷாயம் செய்வது எப்படி தெரியுமா?
இந்த சிறு குழந்தைகளுக்கு இந்த இலையின் சாறு தர வேண்டுமானால், ஒரே ஒரு சிற்றிலை போதுமாம்.. இந்த இலையை வாட்டி, கையால் கசக்கி சாறு எடுத்து வடிகட்டி சங்கில் ஊற்றி குழந்தைகளுக்கு தரலாம்..
கஷாயம்: இதுவே பெரியவர்கள் என்றால், 3 இலைகளை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் தண்ணீரில் அதை போட்டு கொதிக்க விட்டு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் போல தயாரித்து குடிக்கலாம். கண் அழற்சி, மற்றும் நரம்புகளுக்கும் இந்த கஷாயம் சத்து தருகிறது.. வியர்வையை உண்டாக்கும் தன்மை இந்த தாவரத்துக்கு என்பதால், எந்த ரூபத்திலாவது உணவில் எடுத்து கொள்வது நல்லது என்கிறார்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications