ஒல்லி ஒல்லியா இருக்கீங்களா.. அப்ப உடனே பனங்கிழங்கை கையிலெடுங்க.. ஒரே கிழங்கில் ஓராயிரம் ஆச்சரியங்கள்
சென்னை: ஆரோக்கியமான முறையில் உடல் எடை கூட வேண்டுமா? பனங்கிழங்கு சாப்பிட்டால் போதும். உடல் எடையை ஒரே சீரான முறையில் பராமரிக்க வேண்டுமா? இதற்கும் பனங்கிழங்கு சாப்பிட்டாலே போதும்.
பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளதென்றால் அது இந்த பனங்கிழங்கில்தான்.. 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகள் இருக்கிறதாம்.. நார்ச்சத்து நிறைந்த இந்த பனங்கிழங்கு மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகிறது.. மலச்சிக்கல் உள்ளவர்கள், இந்த கிழங்கை வேகவைத்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடனே தீர்வு கிடைக்கும்.

ரத்தசோகை: ரத்த சோகை உள்ளவர்களும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பனங்கிழங்கு அருமருந்தாக பயன்படுகிறது. இதிலுள்ள கால்சியம் சத்துக்கள், பற்களுக்கும், எலும்புகளுக்கு உறுதித்தன்மையை தருகிறது..
அதேபோல இந்த கிழங்கு, பெண்களுக்கும், ஆண்களுக்கும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பேணிகாக்கக்கூடியது இந்த கிழங்கு..
பனைவெல்லம்: இந்த கிழங்கை வேகவைத்து, தூளாக்கி அதில் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் கருப்பை வலுப்பெறும். அல்லது இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை உட்பட உடல் உறுப்புகள் பலம் அடையும். அதேபோல, ஆண்களின் விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் இந்த கிழங்கு நன்மை புரிகிறது.
நீரிழிவு நோயாளிகள் கிழங்கு வகைகளை சாப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால் இந்த பனங்கிழங்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த கிழங்கில், இன்சுலின் உற்பத்தியை கூட்டச்செய்யும் பண்புகள் உள்ளதால், குறைந்த அளவு இந்த கிழங்கை சாப்பிடலாம்.
பலவீனம் : உடல் பலவீனமாக இருப்பவர்கள், இந்த பனங்கிழங்கை பொடியாக்கி செய்து சாப்பிடலாம். அதாவது, கிழங்கை நறுக்கி, காயவைத்து இடித்து மாவாக்கி, அதனுடன், கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.. இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கும்.. இதனால், மெலிந்தவர்கள் உடல் தேறுவார்கள்.
இந்த பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, குடல் இயக்கத்தை சீராக்குவதாலும், செரிமானத்தை மேம்படுத்துவதாலும், தேவையற்ற கொழுப்பு தேக்கத்தையும் தடுக்கிறது. அதனால், உடல் எடையை ஒரே சீராக நிர்வகிக்க முடிகிறது. உடல்எடை பனங்கிழங்கை வைத்து குறைக்க முடியாது. ஆனால், எடையை சீராக தக்க வைக்க முடியும்.. அதனால்தான், உடல் பருமன் உள்ளவர்கள், குறிப்பிட்ட அளவில்தான் இந்த கிழங்கை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
குளிர்ச்சி காய்: இந்த கிழங்கில், பித்தம் அதிகமாகவே உள்ளதால், மிளகு சேர்த்து சாப்பிடுவது நல்லது. அதேபோல, சிலருக்கு வாயுத்தொல்லை ஏற்படலாம். அதனால், இந்த பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து மாவாக்கிவிட்டு, அதற்கு பிறகு சமைத்தால், தொந்தரவு வராது.. அதேபோல, அதிக குளிர்ச்சியை உடையவர்கள், இந்த குளுகுளு பனங்கிழங்கை தவிர்த்துவிடலாம்.












Click it and Unblock the Notifications