வெறும் பழம்.. அதுவும் பனம்பழம் போதுமே.. பலனுள்ள பனை பழத்தின் அதிசயம்.. ஆணின் அருமருந்து பனம்பழச்சாறு
சென்னை: இன்றைய தலைமுறையினர் அவ்வளவாக பார்த்திராத, ருசித்திராத பழம்தான் பனம்பழம்.. பனை மரத்தின் பழத்தின் பலன்களை, நம்முடைய முன்னோர்கள் நிறையவே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம், இந்த பனம்பழத்தின் சத்துக்கள்தான்.
நுங்கு பல நன்மைகளை தருகிறது என்றாலும், அதன் முற்றிய காய் பனம்பழமாக மாறுகிறது... இது ஒரு சீசன் பழம்.. ஆடி வரை, பனம் பழசீசன் என்பார்கள்..

சத்துக்கள்: கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, சர்க்கரை, நார்ச்சத்து, புரோட்டீன், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், வைட்டமின் B6 போன்றவை அடங்கியதுதான் இந்த பனம்பழம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை.
நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது இந்த பனம்பழம்.. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.. மிகக்குறைந்த அளவு கலோரிகளையும் அதிக அளவு பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களையும், கொண்டுள்ள இந்த பழம், உடலுக்கு வலு தரக்கூடியது.. எலும்புகள் வளர்ச்சிக்கு உதவக்கூடியது..
மலச்சிக்கல்: நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அதிகம் என்பதால், மலச்சிக்கலை போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் அகற்றி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதனால்தான், வயிறு தொடர்பான நோய்களை குணப்படுத்தவும், அந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், பனம்பழங்கள் பேருதவி புரிகின்றன.. சர்க்கரை நோயாளிகளும் இந்த பழத்தை சாப்பிடலாம்..
உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.. வெல்லத்துடன் சேர்த்த பனம்பழங்களை சாப்பிட்டாலே போதும், குமட்டல், வாந்தி உள்ளிட்ட அஜீரணத்தை போக்குகிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, சருமத்தை காக்கிறது.. அதேபோல, ஆண்களின் குறைபாடுகளையும் இந்த பனம்பழங்கள் போக்குகின்றன.. நன்றாக பழுத்த பனம்பழங்களை சாப்பிட்டால், விந்து அளவு அதிகரிக்கின்றதாம். அதிகரிக்கிறது.
சிறுநீரகம்: சிறுநீரகத்திற்கு இந்த பனை பழங்கள் மிகவும் நல்லது.. சிறுநீர் தொடர்பான வியாதிகளையும் இந்த பனம்பழங்கள் நீக்கிவிடுகின்றன.. உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. மன அழுத்தத்தையும், மன பதட்டத்தையும் நீக்குகிறது இந்த பனம்பழங்கள். பனம்பழத்தின் சாறு மிகச்சிறந்த மருந்தாகும்.. சரும நோய்களுக்கு இந்த சாறு பூசினால் நிவாரணம் கிடைக்கும்.
அல்லது பனை இலைகளின் சாறுகளையும், வீக்கங்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.. டைபாய்டு காய்ச்சல் என்றாலும், அதற்கும் இந்த இலைகளே மருந்தாகின்றன.. இதன்சாறுகள், உடல் முழுவதும் உள்ள வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை தருகின்றன.
பனம்பழம்: இந்த பனம்பழத்தை பச்சையாக சாப்பிடக்கூடாது.. நெருப்பு மூட்டி, சுட்டு, அதன் சதைப்பகுதியை மட்டும் சாப்பிட வேண்டுமாம்.. அதாவது இந்த பனம்பழத்தை நெருப்பில் சுட்டு வாட்டும்போதே, அதிலிருந்து வரும் வாசனை அந்த பகுதி முழுக்க ஈர்த்துவிடும்.. பழத்தை சுட்டு, அதிலுள்ள தோலை நீக்கிவிட்டு, உள்ளே மஞ்சளாக இருக்கும் பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும்.
அல்லது பனம்பழச் சாறு தயாரிக்கலாம். அல்லது சர்க்கரை பாகு சேர்த்து ஸ்குவாஷ் போன்று தயாரித்து வைத்து கொண்டால், வெயில் காலத்துக்கு சிறந்த பானமாக இருக்கும். அல்லது பனம்பழச்சாற்றுடன் மாவு சேர்த்து பிசைந்து பணியாரம் போல செய்வார்கள்.. தேங்காய், வாழைப்பழம், பால், சர்க்கரை சேர்த்து இனிப்புகள் செய்வார்கள்.
அளவுடன் நல்லது: ஆனால், பனம்பழத்தில் மாவுச்சத்து அதிகம் என்பதால், நிறைய சாப்பிடக்கூடாது. வயிறு உபாதைகள் ஏற்படலாம். அல்லது தசைப் பிடிப்பை தந்துவிடலாம். எனவே அளவுடன் சாப்பிடுவதே ஆரோக்கியமாகும்.. அதேசமயம், பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், அலர்ஜி உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே இந்த பனம்பழத்தை சாப்பிட வேண்டும்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications