Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழுக்கை தலை.. இது ஒன்னு இருந்தாலே, ஓராயிரம் தொந்தரவு ஓடுமே.. பப்பாளி இலைகள் அதிசயம்.. பெஸ்ட் தீர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பப்பாளியை போலவே பெரிதும் பயன்படக்கூடியது பப்பாளி இலைகள்.. இந்த பப்பாளி இலைகள் கீல்வாதத்துக்கு மருந்தாக திகழ்கின்றன.. எப்படி தெரியுமா?

வைட்டமின் A,B,C,E,K பப்பெய்ன், ஆல்கலாய்டு சத்துக்கள் நிறைந்தவை இந்த இலைகள்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் திறன் கொண்டவை. வெறும் பப்பாளி இலைகளை, அரைத்து ஜூஸ் செய்து சாப்பிடுவார்கள். அல்லது வெறும் சாறு எடுத்தும் மருந்தாக உட்கொள்ளலாம்.

கடும் காய்ச்சல்: உஷ்ணதன்மை வாய்ந்த இந்த பப்பாளி, கடுமையான காய்ச்சலையும் போக்கக்கூடியது.. அதாவது டெங்கு காய்ச்சல் என்றாலே, அதற்கு கொடுப்பது இந்த பப்பாளி இலைகள்தான். வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்றவற்றுக்கும் தீர்வை தரக்கூடியது.

Do you know the Excellent Health Benefits of Papaya Leaves and papaya Leaf Juice is the Best for Hair Growth

ரத்தம் உறைதல் அல்லது உறைதலை ஊக்குவிக்க செயல்புரியும் செல் துண்டுகளுக்கு, "ரத்த தட்டுகள்" அதாவது ரத்த பிளேட்லெட் என்பார்கள்... டெங்கு போன்ற விஷக்காய்ச்சல்கள் நம்மை தாக்கும்போது, இந்த ரத்த பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.. அதுபோன்ற நேரத்தில் இந்த பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை அதிகமாகும் என்கின்றன ஆய்வுகள். இதை உணர்ந்துதான், பப்பாளி இலைகளை பயன்படுத்தி மாத்திரைகளும் தயாரிக்கப்படுகின்றன.

பப்பாளி இலை: நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு பப்பாளி பழத்தை சாப்பிடலாம் என்பார்கள்.. ஆனால், பப்பாளிக்காய் அப்படி இல்லை.. தாராளமாக சமையலில் சேர்த்து கொள்ளலாம். அந்தவகையில், இந்த பப்பாளி இலைகளும் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியவை.. இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்..

அதேபோல, உடல் எடை குறையவேண்டும் என்று முயற்சிப்பவர்கள், இந்த இலைகளை விட்டுவிடக்கூடாது. நீர்ச்சத்தும் அதிகம்.. நார்ச்சத்தும் அதிகம் என்பதால், ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். இந்த சாறில் கலோரிகளும் குறைவு.. எனவே, தேவையற்ற கொழுப்புகள் கறைக்கப்பட்டுவிடுவதுடன், உடலிலுள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும். உடலில் காயங்கள் ஏற்பட்டுவிட்டாலோ, அல்லது வடுக்கள், சரும அலர்ஜி இருந்தால், அதற்கும் இந்த இலையின் விழுதுகளே மருந்தாகின்றன.

சிகிச்சைகள்: அதேபோல, தசை வலி மற்றும் மூட்டு வலிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் இந்த இலைகள்தான் உபயோகமாகின்றன.. பப்பாளி இலைச்சாறு எடுத்து, எலிகளுக்கு தந்து பார்த்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அப்போதுதான், கீல்வாதம் (arthritis) கொண்ட எலிகளின் பாதங்களில் வீக்கம் கணிசமாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம். எனவே, கீழ்வாதம், மூட்டுவலி போன்ற பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு பப்பாளி இலைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

சருமத்துக்கு கவசம் போல பாதுகாப்பை தருகிறது இந்த இலைகள்.. ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள இந்த இலைகள், தோலில் ஏற்படும் வயதான சுருக்கத்தை தள்ளி போடுகிறது. முகப்பருக்களை போக்குகிறது..

பொடுகு: இந்த பப்பாளி இலைகளை அரைத்து விழுதாக தலைமுடிக்கு தடவிவந்தால், தலைமுடி கொட்டுவது நின்றுவிடும்.. மாறாக நன்றாக செழித்து வளர துவங்கும்... தலைமுடிக்கு இந்த இலையை அதிகம் உபயோகிக்க காரணம், இந்த இலைகளிலுள்ள ஆல்கலாய்டு கலவை, பொடுகு மற்றும் வழுக்கைக்கு எதிராக திறம்பட செயல்படுகிறதாம்..

கர்ப்பிணிகளுக்கு இந்த பப்பாளி இலைகள் கை கொடுக்கின்றன.. முக்கியமாக கர்ப்பப்பை சுருக்கங்களை குறைப்பதில் இந்த இலையின் பங்கு அபாரமாக உள்ளது.. அதேபோல, PCOD என்று சொல்லப்படும் நீர்க்கட்டி பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இந்த இலை மிகவும் பயன்தரக்கூடியது. அதனால், மருத்துவர்களின் அறிவுரையுடன் இந்த இலையை பயன்படுத்தினால், பல உடல்நலம் சார்ந்த தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+