புஸ் புஸ்ஸூனு உடம்பா? அப்ப "இதை" சாப்பிடுங்க.. எண்ணெய் கம்மியா ஊத்தி சமையுங்க: சர்னு வெயிட் குறையும்
சென்னை: உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, சிவப்பு அவல் கை கொடுக்கிறது.. ஆனால், இந்த அவலை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
நெல்லை ஊறவைத்து இடித்து, அதிலிருந்து உமியை நீக்கினால், நமக்கு அவல் கிடைக்கிறது. சிவப்பு அவல், வெள்ளை அவல் என்று 2 வகைகள் இருந்தாலும், சிவப்பு அவலில் சற்று கூடுதல் சத்துக்கள் உள்ளது என்கிறார்கள். ஆந்தோசயனின் என்ற நிறமி சிவப்பு நிறத்துக்கு காரணமாக உள்ளது.

அவல் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புகூடும், அனிமியா பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இந்த சிவப்பு அவலை சாப்பிடலாம். இதனால் திடீரென சர்க்கரை அதிகரிப்பு ஏற்படாது.
சர்க்கரை நோயாளிகள்: இதிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. பட்டை தீட்டப்படாத அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவதால், இதை அளவுடன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதனால், வயிற்றுப்புண், வாய்ப்புண்களும் ஆறும்.
புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுப்பதில், சிவப்பு அவலுக்கு பெரும் பங்கு உள்ளது.. ரத்தசோகையால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த சிவப்பு அவலை சாப்பிட வேண்டும். ஆனால், உடல் எடை குறைப்போர் இந்த அவலை எப்படி சாப்பிட வேண்டும்? உடை எடை குறைப்பில், அவல் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா?
தானிய வகைகள்: இப்போதெல்லாம் முன்பு போல இல்லை.. அரிசி அவலுக்கு பதிலாக கோதுமை அவல் சாப்பிட சொல்கிறார்கள்.. அதேபோல பாரம்பரிய அரிசிகளும் நிறைய வந்துவிட்டன. மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, தினை, சாமை, வரகு, கம்பு, என சிறுதானியங்களிலிருந்து அவல் பெறப்படுகிறது.. மிஷின்களிலேயே இவை தயாராகி, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் வந்துவிடுவதால், இதை தயாரிக்கும் செலவும் மிச்சமாகிறது.
சிவப்பு அவல் போலவே, இந்த அவல்களிலும் பல்வேறு சத்துக்கள் இந்த அவலில் உள்ளதால், காலை உணவில் சாப்பிடும்போது, நாள் முழுவதும் தேவைப்படும் சத்துக்கள் இதன்மூலம் கிடைத்துவிடுகின்றன. ஒரு கப் அவலில், 250 கலோரிகள் இருக்கிறதாம்.. இதுவே வறுத்த அவலில் 333 கலோரிகள் இருக்கிறதாம்.. காலையில் அவல் சாப்பிட்டால், நீண்ட நேரத்துக்கு பசியும் எடுக்காது..
சமையல்: அவலில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் C, A, கார்போஹைட்ரேட்கள் என எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. எனவே, குறைந்த எண்ணெய்யில அவலை சமைத்தாலே போதும்..
அதேபோல அவல் செய்யும்போது, அதே அளவுக்கு காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.. அதுமட்டுமல்ல, அவலை வேக வைத்து சாப்பிட்டால், உடல் எடை குறைப்பதில் அதிக ரிசல்ட் கிடைக்கும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, அவலை அளவுடன்தான் சாப்பிட வேண்டும்..!!
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications