முள்ளங்கி கிழங்கு.. முழு உடலையும் காக்கும் முள்ளங்கி.. காய்களில் முள்ளங்கி ஏன் பெஸ்ட் தெரியுமா? வாவ்
சென்னை: முள்ளங்கி கிழங்கில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? முள்ளங்கியை சர்க்கரை நோயாளிகள் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
மொத்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்று இந்த முள்ளங்கியை சொல்லலாம். வைட்டமின் C, A, B6, B12, ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன.. கலோரிகள் மிகவும் குறைவு.. புரதமும் குறைவு.. கொழுப்பும் குறைவு.. ஆனால், நார்ச்சத்து மிகவும் அதிகம். முள்ளங்கியை தவிர்க்க முடியாததற்கு இதுதான் முக்கிய காரணம்.

நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு.. அடிக்கடி முள்ளங்கி கிழங்கை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படுவதுடன், சிறுநீரகமும் வலுப்படும்.. முள்ளங்கி கிழங்கை பொறுத்தவரை, காய், இலை, விதை மருத்துவ குணம் நிரம்பியது..
நீர்ச்சத்து நிறைந்த இந்த கிழங்கை சாப்பிட்டுவது சிறுநீரைப் பெருக்கும். மலச்சிக்கலை போக்கி, குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. பசியை உண்டாக்கும்.. சிறுநீரக கோளாறு இருந்தால், முள்ளங்கி கிழங்கில் சாறு எடுத்து, 30 மில்லி தினமும் 2 வேளை குடித்து வந்தாலேதீர்வு கிடைக்கும்.
ஜலதோஷம்: இந்த கிழங்கில் உள்ள வைட்டமின் C சத்துக்கள், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.. ரத்த நாளங்களின் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. இந்த வைட்டமின் C சருமத்தை காக்கிறது.. காய்ச்சல், ஜலதோஷத்தை போக்குகிறது..
புற்றுநோயை உண்டாக்கும் மரபணு மாற்றங்களிலிருந்து, செல்களை பாதுகாக்கக்கூடிய தன்மை இந்த முள்ளங்கி கிழங்குக்கு உண்டு.. அத்துடன், புற்றுநோய் செல்களாக இனி வளரக்கூடிய செல்களை அழிக்கும் சக்தியும் முள்ளங்கியில் உண்டு. நோயெதிர்ப்பு செயல்பாட்டினை பெருக்குகிறது..
இருதய நோய்கள்: பெரும்பாலும், அந்தோசயினின்கள் அதிகமுள்ள உணவுகள் இதயத்தை காக்கக்கூடியவை. அந்தவகையில், சிவப்பு நிற முள்ளங்கியில் அந்தோசயினின்கள் நிறைய உள்ளன.. இதனால், இருதய நோய்களும் குறையும்.. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தவிர்க்க முடியாத கிழங்கு இந்த முள்ளங்கி. முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், கல்லடைப்பு குணமாகும்..
வைட்டமின் B அதிகமுள்ள இந்த காய், எலும்பு மஜ்ஜையில் உள்ள வெள்ளை / சிவப்பு இரத்த அணுக்களை ஒருங்கிணைக்கிறது.. DNA, RNA-வை உருவாக்கும் செயல்முறைக்கு இந்த கிழங்கு தூண்டுகோலாகிறது.
காதுவலி: கல்லீரலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகளை நீக்கி, கல்லீரலை சுத்தம் செய்வதில் முள்ளங்கிக்கு பெரும்பங்கு உண்டு.. கல்லீரலில் உற்பத்தியாக கூடிய பில்ருபின் உற்பத்தியை கட்டுப்படுத்தி கல்லீரலை பாதுக்காக்கிறது.. அத்துடன், கல்லீரலை சுற்றியுள்ள வைரஸ் கிருமிகளின் தாக்குதலை தடுக்க இந்த கிழங்கு உதவுகிறது.
சுவாச கோளாறுகள் உள்ளவர்கள், முள்ளங்கி கிழங்கை நறுக்கி காயவைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதில் ஒரு கைப்பிடி மட்டுமே எடுத்து, கஞ்சி போல செய்து குடித்து வந்தால், சுவாச குறைபாடுகள் தீரும்... கடுமையான காது வலி இருந்தால், காது குடைவது போல இருந்தால் அல்லது காதில் சீழ் வடிந்தால், வெறும் முள்ளங்கியை, சாறு எடுத்து, அதனுடன் இந்துப்பு கலந்து சூடு செய்து, 2 சொட்டு காதில் விட்டால் போதும்.












Click it and Unblock the Notifications