ரஸ்தாளி..ம்ஹூம் ரஸ்தாலியாம்.. அதைவிடுங்க.. சர்க்கரை நோயாளி சாப்பிட வேண்டிய பழம் இதுதானாமே.. சூப்பர்ல
சென்னை: சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? அதுவும் ரஸ்தாலியை சாப்பிடலாமா?
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் B6, வைட்டமின் C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன என்றாலும், வாழைப்பழங்களை வாழைப்பழம் சாப்பிடும்போது, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும்...

எனவே, இதை தொடர்ந்து சாப்பிடும்போது, டைப் 2 டயாப்பட்டீஸ் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் உண்டு. எனினும், ஒருசில வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் குறைவாக சாப்படலாம். அதில் ஒன்றுதான் பச்சை வாழைப்பழம்.
பச்சை வாழைப்பழம்: பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள், இந்த பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்கிறார்கள்.
பச்சை வாழைப்பழத்திலுள்ள ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகள், செரிமானத்தை மெதுவாக்கி, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுக்கிறதாம்.. அத்துடன், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறதாம். அதேபோல, நார்ச்சத்து அதிகமாக உள்ள செவ்வாழை, நேந்திரம், போன்ற வாழைகளை சாப்பிடலாமாம். அதுவும், டாக்டர்களின் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டியது பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழங்களாகும். இதில் ரஸ்தாளியை பொறுத்தவரை, இந்த பெயரே வித்தியாசத்தை தருகிறது.

இதன் பெயர் ரஸ்தாளி கிடையாதாம்.. ரஸ்தாலி என்றுதான் சொல்ல வேண்டுமாம்.. கதலி என்றால், பழங்கால தமிழில் வாழையை குறிக்கும் சொல்லாகும். ரச + கதலி = ரசகதலி என்பதுதான் என்ற பெயரின் மருவிய வடிவமே ரஸ்தாளி ஆகிவிட்டதாம்..
ரஸ்தாளி: இந்த ரஸ்தாளியை எடுத்துக்கொண்டால், மருத்துவ குணங்கள் குறைவுதான். ஆனால், மஞ்சள் காமாலையை தடுப்பதில் ரஸ்தாளிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இந்த பழம் கட்டாயம் தர வேண்டும். ஆனால், ரஸ்தாளிபழம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தரும் என்றாலும், சாப்பாடு சாப்பிட்டதுமே இதை சாப்பிடக்கூடாதாம்.. காரணம், மந்த தன்மையை தந்துவிடுமாம்..
இருந்தாலும், வளரும் குழந்தைகளுக்கு அரை ஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்துவந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications