வெங்காயத்தாளில் இவ்வளவு சத்துக்களா? அஜீரணம் முதல் ஆஸ்துமா வரை விரட்டும் வெங்காய தாள் ஸ்பிரிங் ஆனியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்ப்பதற்கு வெறும் தாள் போலவே இருக்கும் .. ஆனால், புற்றுநோய் செல்களையும், நாலடி தள்ளி நிறுத்தும் பண்பு கொண்டது இந்த வெங்காய தாள்கள்.

வெங்காய தாள்களில் வைட்டமின் K, C, A, B1, B2, B3, B5, B6, B9, கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலீனியம், துத்தநாகம், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, பீட்டா கரோடீன்கள், இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

Do you know the Excellent Health benefits of Spring Onions and Spring Onions is the Best nutrients food for all

சத்துக்கள்: குறைந்த அளவு கலோரியும, அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் கொண்டிருப்பதால்தான், சத்து நிறைந்த உணவாக நமக்கு திகழ்கிறது.. அதாவது, ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படும் நார்ச்சத்தில், 10 சதவீதத்தை இந்த வெங்காய தாள்கள் பூர்த்தி செய்துவிடுமாம்.

நார்ச்சத்து நிறைந்த இந்த வெங்காய தாள்களில் உள்ள புரதமானது, கொழுப்புச்சத்தினை சிதைக்க செய்கிறது.. எனவே, குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறிகள், பழங்களுடன் சேர்த்து இதையும் சாப்பிடும்போது நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

இன்சுலின்: இந்த வெங்காயத்தாளில் சல்பர் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.. இதனால் இன்சுலினை உற்பத்தி செய்ய போதுமான திறனும் கிடைக்க செய்கிறது.. வெங்காய தாள்களை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் எளிதில் தாக்குவதில்லை.. நீரிழிவு நோயாளிகளும் வெங்காயத்தாளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்...

நார்ச்சத்து நிறைந்திருப்பதால், செரிமானம் சீராகிறது.. இது மலச்சிக்கலை தீர்க்கிறது.. வைட்டமின் A உள்ளதால், பார்வை கோளாறுகளை தடுத்து நிறுத்துகிறது இந்த வெங்காய தாள்கள்.. குறிப்பாக, மாலைக்கண், கண்புரை போன்றவற்றை நீக்கி, கண்பார்வையை கூர்மையாக்குகிறது.. பார்வைத் திறனை கூர்மையாக்குகிறது.

எலும்பு உறுதி: வைட்டமின் K உள்ளதால், எலும்புகளை பலப்படுத்துகிறது.. வைட்டமின் K உள்ளதால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, சீரான ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது. ரத்த உறைதலுக்கு மிகவும் அவசியமாகிறது...

புற்றுநோய் செல்களை உருவாக்கும் நொதிகளின் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகிறது.. குறிப்பாக, வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்ற கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை வெகுவாக குறைக்க செய்கிறதாம்.. குடல், பெருங்குடல் மட்டுமல்லாமல், வயிறு, தலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாக்கத்தை வெங்காய தாள்கள் தடைசெய்கின்றன..

கொழுப்புகள்: தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதால், இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெங்காயத்தாள் அருமருந்தாகின்றன. இந்த வெங்காயத்தாளில் உள்ள அலிசின் என்ற பொருள் சருமத்தை கவசம் போல காக்கிறது.. இதனால், முகசுருக்கத்தையும் தள்ளிப்போட்டு பொலிவை தருகிறது..

இத்தனை சத்துக்கள் நிறைந்த வெங்காய தாள்களில் சூப்புகள் செய்யலாம்.. சாலட்டுகளில் பயன்படுத்தலாம்.. பாஸ்தா, நூடுல்ஸ் செய்யலாம்.. முட்டை பொடிமாஸில் சேர்த்து பயன்படுத்தலாம். எனவே, உணவு நிபுணர்களின் ஆலோசனையை பெற்று, நிறைவான ஆரோக்கியத்தை பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+