மீனில் ஸ்பெஷல் இதுவா? மிரட்டும் திருக்கை மீன்கள்.. திகைக்க செய்யும் திருக்கை மீனை எப்படி சமைக்கணும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மீன்கள் எது தெரியுமா?

இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதிலும், இதய நோய்கள் போன்ற அபாயத்தை குறைப்பதிலும், புரதங்கள், வைட்டமின் D, B5 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒமேகா 3 அமிலமாகும். இந்த அமிலங்கள் அதிகமாக உள்ளது மீன்களில்தான்..

Do you know the Excellent Health Benefits of Thirukkai Meen and Can Diabetics take the Super Thirukkai Fish

சர்க்கரை நோயாளிகள்: குறிப்பாக, கொழுப்பு மீன்கள் கண்டிப்பாக நீரிழிவு ஆபத்தை குறைக்கின்றன. அந்தவகையில், சால்மன், ஹெர்ரிங், ஜிலேபி கெண்டை, டுனா மீன், மத்தி மீன், சங்கரா மீன், கானாங்கெளுத்தி போன்ற மீன்களை வாரம் ஒருமுறையாவது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.. எனினும், சுமார் 140 கிராம் சமைத்த மீன்களை மட்டுமே நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

இந்த வரிசையில் திருக்கை மீன்களையும் சேர்த்து கொள்ளலாம்.. இந்த மீன்கள் பார்ப்பதற்கே, தினுசாக இருக்கும்.. தட்டையான உடலில், மேலேயே 2 கண்கள், முட்களை போன்று பற்கள் காணப்படும். மீனின் வால்பகுதி, மீனை விட பெரிதாக இருக்கும்.. வாலில் 2 கொடுக்கு இருக்கும்.. இந்த திருக்கையிலேயே 500 வகைகள் உள்ளதாம். எனினும், வவ்வால், புள்ளி, முள்ளம் திருக்கை போன்ற வகை திருக்கைகளை பிடிக்க மட்டும் அரசு தடை விதித்துள்ளது..

எதிர்ப்பு மண்டலம்: இந்த மீனில் வைட்டமின் D,E,B1,B2,B6,B12,C சத்துக்கள் அடங்கியுள்ளதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுத்தப்படுகிறது.. மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கால்சியம் அதிகமுள்ள மீன்கள், எலும்புகளை பாதுகாக்கிறது.. இதயநோய், ஆஸ்துமா, புற்றுநோய், நீரிழிவு போன்ற அபாயத்தையும் குறைக்கிறது.

ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் திருக்கை மீனை தாராளமாக சாப்பிடலாம்.. ரத்த விருத்திக்கும், தலைமுடி உதிர்வுக்கும் இந்த மீன்கள் பேருதவி புரிகின்றன.. தலைசுற்றல், பித்தம், வாந்தி உள்ளிட்ட கோளாறுகளை நீக்கக்கூடியது.. அஜீரணத்தை போக்கக்கூடியது.. ஆஸ்துமா, புற்றுநோய், பிற அழற்சி சார்ந்த பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்க இந்த மீன்கள் உதவுகின்றன..

கெட்ட கொழுப்பு: திருக்கை என்றாலே, அது தாய்மார்களின் மீன் என்று சட்டென சொல்லிவிடுவார்கள்.. காரணம், தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தக்கூடிய தன்மை இந்த மீனுக்கு உள்ளது.. கெட்ட கொழுப்பு குறைவாக உள்ளதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களையும் நீக்குகிறது. வயதாகும்போது ஏற்படும் பார்வை கோளாறுகளையும் சீராக்குகிறது.

ஒரு கிலோவிற்கு 100 லிருந்து 150 ரூபாய் வரையிலும் செல்வதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.. திருக்கை மீன்களைவிட, திருக்கை கருவாட்டுக்கு கேரளாவில் டிமாண்டு அதிகமாம். பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கருவாட்டையும் சமைத்து தருவார்களாம்.

எப்படி சமைப்பது: இந்த திருக்கை மீன்களை மற்ற மீன்களை போல சமைக்க முடியாது.. மீன்களின் சதைகள் கடினமாக இருக்கும் என்பதால், மீனை சுத்தம் செய்து, முதலில் குக்கரில் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொண்டு, அதற்கு பிறகே சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.. இல்லாவிட்டால் மீன்கள் வெந்துவர அதிக நேரமாகும். வழக்கம்போல குழம்பு, மீன் புட்டு செய்யலாம்.. ஆனால், நிறைய பூண்டு சேர்த்து சமைத்தால், ருசி அபாரமாக இருக்குமாம்.

ஒரு கிலோ திருக்கை மீனை கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், வெந்தயம், வெங்காயம், கருவேப்பிலை, நிறைய பூண்டு பற்கள், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

குழம்பு: பிறகு தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்த்து, கரைத்து வைத்துள்ள புளி கரைசலையும் ஊற்ற வேண்டும், உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்தாலே, குழம்ப தயார். இறக்கி வைக்கும்போது, பூண்டு, மிளகு இரண்டையும் தட்டிப்போட்டு விடலாம்.

இதிலேயே தேங்காய் பால் ஊற்றியும் சமைக்கலாம்.. தேங்காய் சேர்ப்பதானால், தாளிப்பின்போது, இஞ்சியை பயன்படுத்தலாம். இதனால் கூடுதல் ருசி கிடைக்கும். திருக்கையை எப்படி சமைத்தாலும், கோழிக்கறி போலவே டேஸ்ட் இருக்குமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+