வெந்தய கீரை.. உச்சி முதல் பாதம்வரை குளுகுளு கீரை.. கருகரு தலைமுடிக்கு வெந்தயக்கீரை போதுமே.. அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெஞ்சுவலி முதல் தலைமுடி, சருமம் வரை காக்ககூடிய கீரை என்றால், அது இந்த வெந்தயக்கீரைதான்.. இந்த கீரையை எந்தெந்த எப்படியெல்லாம் மருந்தாக பயன்படுத்தலாம் தெரியுமா?

வெந்தயத்தின் இளம் விதைகளில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை ஒளிந்திருக்கின்றன.. வெந்தயத்தின் முதிர்ந்த விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின், போன்ற வேதிப்பொருட்கள் ஒளிந்திருக்கின்றன.

Do you know the Excellent Health Benefits of Venthaya Keerai and Fenugreek Leaf is the Best food for all

நார்ச்சத்துக்கள்: நூறு கிராம் அளவு வெந்தயக்கீரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது.

இதில், வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாகவே உள்ளன.. அதனால், உடல் சோர்வாக உள்ளவர்களும், கண் பார்வை மங்கலாக உள்ளவர்களும், உடல் சூடு அதிகமாக உள்ளவர்களும் தாராளமாக வெந்தயக்கீரையை சாப்பிடலாம்.. குளிர்ச்சியை தரக்கூடிய தன்மை இந்த வெந்தயத்துக்கு உண்டு.. எனவே, உடலிலுள்ள உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது.. சிறுநீர் பெருக்கத்தை அதிகரிக்கக்கூடியது..

வெந்தயக்கீரை: வெந்தயமும் சரி, வெந்தயக்கீரையும் சரி பெண்களுக்கு அருமருந்து என்றே சொல்லலாம். மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யக்கூடிய சக்தி இந்த வெந்தயத்துக்கு உண்டு.. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியையும் தீர்க்கக்கூடியது..

வயிற்றுப்போக்கு, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய்களை கண்டுக்குள் கொண்டுவரும் இந்த கீரை. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுவதில், இந்த கீரையின் பங்கு அபரிமிதமானது..

தாய்மார்கள்: பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கீரையை அடிக்கடி சமைத்து தந்தால், பால் உற்பத்தி பெருகும்.. அல்லது கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தந்தாலும் பால் சுரக்கும். வயிறு உபாதைகள் இருப்பவர்கள், இந்த வெந்தயக்கீரையை வெண்ணையில் வதக்கி சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். குறைந்த கலோரிகள் உள்ளதால், இந்த கீரையை உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோயாளிகள் இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தாலே சர்க்கரை நோய் கட்டுப்படும்.. நரம்பு கோளாறுகளும் தீரமும். மலச்சிக்கல் உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிடக்கூடிய கீரையா இந்த வெந்தயக்கீரை உள்ளது. இதனால் குடல் புண்களும் ஆறும்.

வெந்தயக்கீரைகள்: இந்த கீரையை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? நெஞ்சுவலிக்கு இந்த கீரையை மருந்தாக பயன்படுத்தலாம் என்கிறார்கள்.. அதாவது, வெந்தய கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு, பொடி பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதியாக சுண்டியதும், இதை தினமும் 2 வேளை அரை டம்ளர் குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகுமாம்.

அதேபோல, வெந்தயக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் அழகை தரும்.. மினுமினுப்பை தரும்.. தீக்காயங்கள் ஏற்பட்டுவிட்டால், வெந்தயக்கீரையை பச்சையாகவே அரைத்து பற்றுப்போடலாம்.. நாள்பட்ட சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சனைகளுக்கும் இதுபோலவே பற்று போடலாம்.

ரத்தசோகை: அல்லது இந்தக் கீரையை அத்திப்பழத்துடன் சேர்த்து கரைத்து, கட்டிகளின் மீது பற்று போட்டால், கட்டிகள் சீக்கிரமாக பழுத்து உடைந்துவிடும்.. அந்த அளவுக்கு குளிர்ச்சி வாய்ந்தது இந்த கீரைகள்.

கல்லீரல் தொந்தரவு உள்ளவர்கள், வெந்தயக்கீரையை, பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டாலே போதும்.. இதனால், கல்லீரல் பலப்படுவதுடன், ரத்தசோகை பிரச்சனையும் தீரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+