மூக்கடலை.. மூக்கு மேல விரல் வெப்பீங்க.. ஆச்சரிய கடலை.. ஆமா, கறுப்பு + வெள்ளை மூக்கடலையில் எது பெஸ்ட்
சென்னை: மூக்கடலையில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், எப்படி, எவ்வளவு, சாப்பிட வேண்டு தெரியுமா? வெள்ளை மற்றும் கருப்பு மூக்கடலையில், எதில் அதிக சத்துக்கள் உள்ளது தெரியுமா?
கொண்டைக்கடலை என்று சொல்லப்படும் மூக்கடலையை, சென்னா என்றும் சொல்வார்கள்.. மூக்கடலையில், புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து, தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன.

நார்ச்சத்துக்கள்: முக்கியமாக நார்ச்சத்துக்கள் அதிகம்.. 1 கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், உடல் எடையை குறைக்க இந்த பயிறை தேர்ந்தெடுக்கிறார்கள்..
கிளைசீமிக் இன்டெக்ஸ் இதில் குறைவாக இருப்பதால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.. தினமும் 30 கிராம் நார்ச்சத்து எடுத்துக்கொண்டாலே, டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை குறைப்பதாக 2014 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நிரூபிணம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுப்பதுடன், குடல் கேன்சரை தடுக்கக்கூடிய பணியை இந்த கடலை செய்கிறது.. ஓரளவு கொழுப்பு இருந்தாலும்கூட, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், சாப்பிடக்கூடிய பயிறு வகையாக உள்ளது. மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராடக்கூடியது..
பற்கள் வலிமை: ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் மூக்கடலையை முளைகட்டி சாப்பிட்டு வர வேண்டும்.. அல்லது, வேகவைத்து, அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும், ரத்த சோகை தீரும். இதிலுள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்க செய்கிறது..
கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மூக்கடலை உள்ளன.. இதில்,சிறிய அளவிலான கறுப்பு கொண்டைக் கடலையில் நிறைய நார்ச்சத்து இருக்கிறதாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், இந்த கடலையை முளைக்கட்டி சாப்பிடும்போது, கொழுப்பு வெகுவாக கரைந்துவிடும்.
நரைமுடி பிரச்சனை: தலைமுடி பிரச்சனை இருந்தாலும், புரோட்டீன் அதிகமுள்ள இந்த கறுப்பு மூக்கடலை கை கொடுக்கும்.. முக்கியமாக நரைமுடியை இந்த கறுப்பு மூக்கடலை தடுத்து நிறுத்துகிறது.. சுருக்கத்தை அகற்றி, முதுமை தோற்றத்தை தள்ளிப்போட்டு, சருமத்தை காக்கிறது.. மூக்கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியது.
வெள்ளை மூக்கடலையை பொறுத்தவரை, கால்ஷியம் சத்து நிறைந்தது.. கொழுப்பினை குறைக்கக்கூடிய நார்சத்து இதிலும் உள்ளது.. உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தக்கூடியது.. இந்த வெள்ளை மூக்கடலையிலுள்ள புரதச்சத்து, கறுப்பு மூக்கடலையில் இருப்பதனை விட அதிகம்... அதேபோல, எலும்பு வலுவு, இரும்பு சத்து இவை இரண்டுமே வெள்ளை மூக்கடலையில் அதிகம். அதேபோல, வைட்டமின், தாது உப்புகள் சத்துக்கள், கறுப்பினை விட வெள்ளை மூக்கடலையில் அதிகம்.
அதிக பலன்கள்: மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நார்ச்சத்து அதிகமுள்ள, வெள்ளை மூக்கடலை உதவுகிறது.. ஆகமொத்தம், கருப்பைவிட, பல விதங்களில், கூடுதல் சத்துக்களை கொண்டிருப்பது வெள்ளை மூக்கடலை என்கிறார்கள். அதற்காக வெள்ளை மூக்கடலையை ஒதுக்க தேவையில்லை.. வெள்ளையில் அதிகமான சத்து இருந்தாலும், பலன்கள் என்னவோ இரண்டிலுமே ஒன்றுதான் என்கிறார்கள்.
எவ்வளவுதான் நன்மைகளை தந்தாலும், இந்த மூக்கடலைகளை கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.. அதுவும் காலையில் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.. சிறுநீரகக்கோளாறு இருப்பவர்கள், வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், இதனை தவிர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications