Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனில் பெஸ்ட்.. கருவாடுகளில் சூப்பர் இது.. கருவாட்டுக்குள் இத்தனை நன்மை? "அந்த" கோளாறும் விலகிடுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிறைய மருத்துவ நன்மைகளை கொண்டுள்ள கருவாடுகளை முழுமையாக தவிர்த்துவிட முடியுமா? யாரெல்லாம் கருவாடு சாப்பிடக்கூடாது தெரியுமா?
பெரும்பாலும் கொழுப்பு சத்துக்கள் கருவாடுகளில் இருப்பதில்லை.. கிட்டத்தட்ட 85 சதவீதம் வரை புரோட்டீன்கள் கருவாடுகளில் உள்ளன.. அத்துடன், ஏராளமான ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன.

Do you know the Excellent Health Uses of Dry Fish and Which Dry Fish is the Best Medicinal Food for Women

எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், தொற்றுகளை நம்மை அண்டவிடாமல் இருக்க செயல்படுகின்றன. நெஞ்சு சளி, அல்லது இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த கருவாடுகளே மருந்தாகின்றன.. சாறு போல இந்த கருவாட்டுக்குழம்பினை தயாரித்து சாப்பிட்டாலே, சுவாச கோளாறுகள் நீங்கும்..

அஜீரணம்: இதுபோன்ற நேரங்களில், மிளகு பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகை உணவுப்பொருட்களுடன் கருவாட்டையும் சேர்த்து ரசம் வைத்து குடித்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். அஜீரணக் கோளாறு, மந்தம், பசியின்மைக்கு பிரச்சனை இருந்தாலும், இந்த கருவாடு ரசம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

இதனால் வயிற்றிலுள்ள பூச்சிகளும் நீங்கிவிடும். கால்சியம் அதிகமுள்ள கருவாடுகள், பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதி தரக்கூடியவை.. படுக்கையிலிருந்து மீண்டு வந்தவர்கள், அல்லது உடலில் பலம் இல்லாதவர்கள் இந்த கருவாட்டினை குழம்பு போல வைத்து சாப்பிட்டால், சீக்கிரமாகவே உடல் தேறிவிடும்.

அருமருந்து: பெண்களுக்கு கருவாடுகள் 2 வகைகளில் உதவுகின்றன.. ஹீமோகுளோபின் தொந்தரவு இருப்பவர்களுக்கு, இரும்புச்சத்து நிறைந்த கருவாடுகள் அருமருந்து என்றே சொல்லலாம். குறிப்பாக, இறால் கருவாட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறுஉப்புசம், போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம்..
அதேபோல, நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரி செய்யக்கூடியதாக உள்ளன.. அதனால்தான் பிரசவித்த தாய்மார்களுக்கு, தாய்பால் சுரப்பதற்காக, பால் சுறா கருவாடு போன்றவற்றை சமைத்து தருவார்கள்.. திருக்கைமீன் கருவாடிலும் இதுபோலவே, நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.

கொடுவா: கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகிவிடும்.. காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளதாம். கெளுத்தி மீனைவிட, உப்பங் கெளுத்திக்கருவாட்டில்தான் சத்து அதிகமாக உள்ளாம்.. சீலா மீனைவிட, சீலா கருவாடுதான் சத்து அதிகமாம்..

பால்சுறா, சுறா இந்த 2 கருவாடுகளிலும் கூடுதல் மருத்துவ நன்மைகள் உள்ளன.. பெண்களுக்கு இந்த கருவாடு நிறைய பலன்களை தருகிறது.. மாதவிலக்கு நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.. உடலிலும் பலவீனங்கள் ஏற்படும்.. இதுபோன்ற நேரங்களில் சுறா கருவாடு கைகொடுக்கிறது..

கருவாடுகள்: அயிரை மீன் கருவாடுகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் அயிரை மீன்கள் பதப்படுத்தப்பட்டு, கருவாடாக விற்கிறார்கள்.. சளி, இருமல், கக்குவான் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த அயிரை மீன் கருவாடு பயன்படுவதால், அம்மக்களிடையே இன்றும் பெரும் வரவேற்பு உள்ளது..

இவ்வளவு நன்மைகளை தந்தாலும், எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கும் நாட்களில் மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்றவற்றை போலவே கருவாடையும் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. அதிலும், சைனஸ் தொல்லை, சளி இருமல், ஆஸ்துமா தொல்லை இருப்பவர்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த அன்று இவைகளை சாப்பிட்டால் சைனஸ் பிரச்சனை மேலும் அதிகமாகுமாம்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது: கருவாடுகள் பெரும்பாலும் உப்பு நிறைந்தவை என்பதால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்கள், இதய நோய் உள்ளவர்கள், கருவாடு தவிர்க்கலாம்.

அதேபோல, சருமநோய் அல்லது அலர்ஜி இருப்பவர்களும் கருவாட்டை தவிர்க்கலாம்.. இதனால், உடலில் நமைச்சல், அரிப்பு இன்னும் அதிகமாகிவிடும். இவர்களை தவிர, மற்றவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.. எப்போதுமே தவிர்க்க வேண்டிய அளவுக்கு கருவாடு சத்துகுறைந்த உணவு கிடையாது.. வாரம் ஒருமுறையாவது சாப்பிடலாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+