பாமாயில் வாங்கறீங்களா? சமையலுக்கு எந்த எண்ணெய்யை யூஸ் பண்றீங்க? இதயத்தை காக்கும் அற்புதமான எண்ணெய்
சென்னை: பெரும்பாலும் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படுவது கடலை எண்ணெய், பாமாயில்தான்.. இந்த 2 எண்ணெய்களின் நன்மை, தீமைகள் என்னென்ன தெரியுமா?
ரேஷன் கடையில் இந்த பாமாயில் விநியோகிக்கப்படுகிறது.. வைட்டமின் A, E, பீட்டா கரோட்டின் நிறைந்து காணப்படுகிறது.. எனவே, கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எளிதாக தீர்கின்றன.. அத்துடன் தெளிவான பார்வை கிடைக்கவும் இந்த பாமாயில் உதவுகிறது. முக்கியமாக ரெட்டினா குறைபாட்டை சரியாகிறது.

பாமாயில்: இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இந்த பாமாயிலில் உள்ளதால், நம்முடைய உடம்பில் உருவாகக்கூடிய கெட்ட செல்கள் ஒழிந்துவிடும்.. அவ்வளவு ஏன்? புற்றுநோய் செல்களும்கூட ஒழித்துவிடும் தன்மை கொண்டதாம் இந்த பாமாயில்..
இதிலுள்ள வைட்டமின் E சத்துக்கள், நம்முடைய சருமத்துக்கு கவசம் போல காக்கிறது.. இதனால் தோல் ஆரோக்கியமாகிறது.. சுருக்கங்களும் தள்ளிப்போடப்படுகின்றன.. ஹார்மோன்களும் சமநிலை பெறுகின்றன.
நன்மைகள்: இப்படி நன்மைகள் பலவிருந்தாலும், கொழுப்பு சத்துக்களும் பாமாயிலில் அதிகம் உண்டு. அதனால்தான், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், இருதய பாதிப்பு, ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களும், தலைசுற்றல், மயக்கம் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும், பாமாயிலை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். மேலும், அதிக பாமாயிலை பயன்படுத்தினாலும், உடம்பில் பித்தம் சேர்ந்துவிடும்.
கடலை எண்ணெய்யை எடுத்துக் கொண்டால், இதய நோய் அபாயத்தை 30 சதவிகிதம் இந்த கடலை எண்ணெய் குறைக்கிறதாம். தீங்கில்லாத கொழுப்புகள் இதில் உள்ளதால், ரத்த ஓட்டம் சீராகிறது.. நரம்புகள், ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படாதவாறு, செயல்பட வைக்கிறது. ரத்த அழுத்தம் பிரச்சனைகளையும் கடலை எண்ணெய் சரிசெய்கிறது. ஒரு ஸ்பூன் கடலை எண்ணெயில் வைட்டமின் E 11 சதவீதம் இருப்பதால், சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.
கடலை எண்ணெய்: கடலை எண்ணெய்யில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது.. இந்த எண்ணெய்யில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது..
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் போன்றவை உருவாவதும் தடுக்கப்படுகிறது.
இந்த எண்ணெயிலிருக்கும் B வைட்டமின், உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது.. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
120 கலோரிகள்: ஆனால், 1 ஸ்பூன் கடலை எண்ணெய்யில் 120 கலோரிகள் இருக்கிறதாம். அதனால், 2 ஸ்பூன்களுக்கு மேல் இந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது.. அதைவிட முக்கியமாக, நேரடியாக 1 ஸ்பூன்களுக்கு மேல் சாப்பிடக்கூடாதாம்.. எனவே, சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்யை வாங்குவது நல்லது.
இப்படி ஒவ்வொரு எண்ணெய்யிலும் ஒவ்வொரு பண்புகள் இருந்தாலும், எண்ணெய் பொருட்கள் அதிகம் சாப்பிட்டால் இதய நோய்களுக்கான ஆபத்து அதிகமாகிறது.. எனவே, 2 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெய்களை கலந்து சமைத்து சாப்பிட்டால், இதய நோய் அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications