முருங்கை குச்சி.. அருமருந்தாகும் முருங்கை ஈர்க்கு.. கறிவேப்பிலை இருக்குல்ல.. ஆச்சரிய சூப்பர் டிப்ஸ்
சென்னை: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெரிதும் கைகொடுக்கும், முருங்கை குச்சிகளை வைத்து எப்படி கசாயம் செய்வது தெரியுமா?
முருங்கைக்கீரையில், இலை, பட்டை, பூ, வேர் போலவே, மிகவும் உபயோகத்துக்கு உரியது முருங்கை ஈர்க்கு ஆகும்.. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன..

உபாதைகள்: பெண்களுக்கு மேனோபாஸ் பிரச்சனையின்போது, மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு இப்படி பல உபாதைகள் ஏற்படும்.. அவர்கள் இந்த முருங்கை ஈர்க்குச்சியை உணவில் சேர்த்துக் கொண்டால், உபாதைகள் தீரும்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும்.
இந்த குச்சிகளை வைத்து ரசம் செய்யலாம். கசாயம் போல செய்து குடிக்கலாம். வெறும் குச்சிகளை கொதிக்கவைத்து வாய் கொப்பளித்தாலே, வாய்ப்புண்கள் ஆறுவதுடன், ஈறுகளில் உள்ள தொற்றுக்களும் நீங்கிவிடும்.
கால்சியம்: முருங்கைக்கீரையிலுள்ள குச்சிகளைதான் ஈர்க்கு என்று சொல்வார்கள். இந்த குச்சிகளிலும், ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.. முக்கியமாக கால்சியம் நிறைய உள்ளது.. இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது. இவை இரண்டுமே, 40., 45 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மேனோபாஸ் சமயத்தில் கட்டாயம் தேவைப்படும் சத்துக்களாகும்.
இதுபோன்ற நேரங்களில் மூட்டு வலி, கை கால் அசதி, நரம்பு பிடிப்பு, அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுவதால், ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது.. இதற்கெல்லாம் முருங்கை ஈர்க்குச்சி வைத்து சூப் அல்லது கஷாயம் செய்து சாப்பிட்டாலே போதும்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும வயிறு வலி நீங்கும். அசதி நீங்கும்.
கஷாயம்: இந்த கஷாயம் எப்படி செய்வது: முருங்கை குச்சிகளை கழுவி சுத்தம் செய்து, அதை இடித்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இடித்த ஈர்க்குச்சிகளை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, மிளகு, சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.. அடுப்பில் ஒரு வாணல் வைத்து, எண்ணெய், கடுகு, கறிவேப்பில்லை, பெருங்காயம் தாளித்து, கொட்டினால் சூப் ரெடி.
அதேபோல, பருப்பு வேகவைத்து எடுத்து, அதில் ஈர்க்குச்சிகளை கழுவி சேர்த்து சாம்பார் செய்யலாம். அதேபோல, கூட்டு செய்யலாம்.. பருப்பு வேக வைத்து எடுத்து கொண்டு, ஒரு வாணலில் எண்ணெய், தக்காளி, வெங்காயம் தாளித்து, முருங்கை குச்சிகளை சேர்த்து கொட்டி வதக்கிவிட வேண்டும். இதில், பருப்பை கொட்டி வேகவைத்து இறக்கினால் கூட்டு ரெடி.
ரத்தசோகை: கறிவேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு இரண்டையும் சேர்த்து ரசம் போல வைக்கலாம்.. இவை இரண்டுமே ரத்தவிருத்திக்கு உதவக்கூடியவை.. இவை இரண்டையும் வைத்து துவையல் போலவும் செய்யலாம். மாதவிடாய் நேரத்தில், இந்த துவையல் மிகவும் பெண்களுக்கு கைகொடுக்கும். சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், ஜீரண கோளாறுகளும் நீங்கும்..
அதேபோல, இவைகளை பயன்படுத்தி கஷாயம் செய்யலாம்.. முருங்கை ஈர்க்கு , வேப்பிலை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு , கறிவேப்பிலை ஈர்க்கு ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்திக்கொள்ளவும்.
வயிறு பொருமல்: ஒரு பாத்திரத்தில் அனைத்து ஈர்க்குகளையும் சேர்த்து, இவைகளுடன் வசம்பு சேர்த்து நன்கு கருக்க வேண்டும். பிறகு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வைத்து, சுண்ட காய்ச்சி இறக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், வயிறு சம்பந்தமான பிரச்சனை தீரும். வயிற்று இரைச்சல் , வயிற்றுப்பொருமல், ஜீரணக் குறைபாடுகள் நீங்கும்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications