சர்னு உடல் எடை குறையணுமா? வெறும் வயிற்றில் "இதை" ட்ரை பண்ணுங்க.. வெயிட் லாஸுக்கு பெஸ்ட் டிப்ஸ் இதான்
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், நடைப்பயிற்சியும், சத்தான உணவும், முறையான தூக்கமும் அவசியம் என்றாலும், தண்ணீரின் தேவையும் அதிகமாக உள்ளது.
நம்முடைய உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானவை... இதில், 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும், 83 சதவீத தண்ணீரால் ரத்தமும் உருவாகியுள்ளது.. அதனால்தான், எல்லா உடல் உறுப்புகளும் சிறப்பாக செயல்பட தண்ணீர் தேவைப்படுகிறது.

தண்ணீர் பழக்கம்: இரவு தூங்கி காலையில் எழுவதற்கு குறைந்தது 6, 7 மணி நேரமாகிவிடுகிறது.. இந்த இடைப்பட்ட நேரத்தில் வயிற்றில் எதுவுமே இருக்காது.. அதனால்தான், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள்.
இப்படி வெறும் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரத்துக்கு எதுவுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும்.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் இந்த முறையானது ஜப்பான் மக்களிடமிருந்தே, நாடெங்கும் பரவியிருக்கிறது. இதை தான் அவர்கள் "வாட்டர் தெரபி" என்கிறார்கள்.
கபம் அதிகம்: ஆனால், நம்முடைய உடலுக்கு தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும்.. அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்க தேவையில்லை. தாகமே எடுக்கிறதில்லையே என்றால், அவர்களுக்கு கபம் அதிகமாகிறது என்று அர்த்தமாம்.. அதேபோல அதிக தாகம் எடுப்பவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.. இதற்கு மருத்துவரிடம் அணுக வேண்டும்.
ஆனால், காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிப்பது நல்லது என்கிறார்கள்.. இது உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைத்து, எடையை குறைக்க உதவு புரிகிறது.. இதனால், நச்சுக்கள், கழிவுகள் நீங்குவதுடன், குடல் சார்ந்த பிரச்சினைகளும் நீங்கும்.. அது வளர்சிதை மாற்றத்தை தூண்ட உதவும். ரத்த ஓட்டத்தை தூண்டும்.
வெந்நீர்: வெந்நீர் குடிப்பது பதட்டம், சோர்வு நீங்கி, உடலும் மனதும் அமைதிப்படும்.. மூக்கடைப்பு, பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது ஓரளவு நிவாரணம் தரும்.. நாசிப்பாதைகளில் ஏற்படும் வீக்கம் குறைந்து, சுவாசம் எளிதாக்க உதவும்.
எனவே, தினமும் காலையில் 6 முதல் 10 டம்ளர் சூடான தண்ணீர் குடிக்கலாம் என்கிறார்கள். ஆனால், கொதிக்க கொதிக்க குடிக்க தேவையில்லை.. கொதிநிலை கொண்ட சூடான தண்ணீரானது, உணவுக்குழாய்களில் உள்ள திசுக்களை சேதப்படுத்திவிடும். மேலும், சுவை மொட்டுக்களை எரித்து நாக்கிலும் காயத்தை ஏற்படுத்தி விடும். அதேபோல, வெந்நீரில் பச்சை தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாக குடிப்பதும் தவறு.. இதனால் கிருமிகள் அழியாது.
உடல் எடை: உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு, ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் போதும்.. சாப்பிட்ட பிறகும் 2 டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால், நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்..
அதேசமயம், உடலுக்கு தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனை ஏற்படலாம். காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால்தான்.. அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.. தாகம் எடுத்தும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நீர்ச்சத்து குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications