கிடுகிடுனு பற்கள் ஆடுதா.. மஞ்சள் நிற பற்கள் இத்தனை ஆபத்தா? ஆட்டம் காணும் பல்லுக்கு பெஸ்ட் டிப்ஸ்கள்
சென்னை: பற்கள் மஞ்சளாக இருப்பது ஆபத்தானதா? பற்கள் ஆடுவதற்கு என்ன காரணம்? இதற்கு எளிய மருத்துவ தீர்வுகள் உள்ளனவா?
கறை படிய பல காரணங்கள் இருக்கலாம். பற்களை முறையாக துலக்காவிட்டாலோ அல்லது சாப்பிட்ட உணவு பொருட்கள் ஏதாவது பற்களில் தேங்கிவிட்டாலோ இப்படி மஞ்சள் அல்லது பழுப்பு கலருக்கு பற்கள் மாறிவிடும். ஒயின் குடித்தால் பற்களில் கறை வரலாம்.

மஞ்சள் நிறம்: மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் பற்கள் இருந்தாலே, அதை அலட்சியப்படுத்தக்கூடாது.. இந்த கறைகளை நாம் உடனடியாக நீக்காவிட்டால், பாக்டீரியாக்கள் உற்பத்தி இன்னும் அதிகமாகிவிடும். இந்த பாக்டீரியாக்கள், நம்முடைய பற்களை பாதித்து ஈறுகளையும் தாக்கிவிடக்கூடும்.
மெல்லிய மஞ்சள் நிறத்தில் பற்கள் இயல்பாகவே இருந்தால் அது பிரச்சனையில்லை.. ஆனால், அதிக மஞ்சள் நிறத்திற்கு சென்றால் ஆபத்தாகிவிடும்.. வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் உடலில் ஏற்பட்டுள்ளன என்பதே இதற்கு அர்த்தம். அதுக்காக செயற்கையாக பற்களை வெண்மை செய்து கொள்ளக்கூடாது.. மஞ்சள் எப்படி ஆபத்தானதோ, செயற்கையான வெண்மை நிறமும் ஆபத்துதான்.
எலுமிச்சம் பழம்: கறைகளை நீக்குவதில் எலுமிச்சைக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், எலுமிச்சையை அதிகமாக பயன்படுத்த கூடாது.. எலுமிச்சம் பழ சாறு + பேக்கிங் சோடா இரண்டையும் நீரில் குழைத்து கொண்டு, ஒரு சுத்தமான பஞ்சு எடுத்து, இதில் தொட்டு பற்களை துலக்கி வந்தால், கறைகள் நீங்கிவிடும். அல்லது பேக்கிங் சோடா, கற்றாழை ஜெல், கிளிசரின், எலுமிச்சை கலந்து பற்களை பிரஷ்ஷால் தேய்த்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கும்.
ஆரஞ்சு பழதோலை, எலுமிச்சம் பழச்சாறில் தொட்டு, பற்களை தேய்த்து வரலாம். பேக்கிங் சோடா + உப்பு குழைத்து, பற்களை தேய்த்து வரலாம். அடுப்புக்கரியில் பல் தேய்த்தால் சிறப்பு.. காரணம், பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் போன்றவை இந்த கரியில் உள்ளதால், பற்கள் வெண்மையாகும். கொய்யா இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்து வரலாம். 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை, தண்ணீரில் கலந்து மவுத் வாஷ் போல பயன்படுத்தலாம்...
பலவீனம்: சிலருக்கு ஈறுகள் பலவீனம் அல்லது எலும்பு இழப்பு காரணமாக பற்கள் ஆட்டம் காணலாம்.. அல்லது வாய்சுகாதாரத்தை சரியாக கடைப்பிடிக்காமல் இருந்தால் பற்கள் ஆடலாம். பற்களில் காயங்கள், எலும்பு முறிவு, அதிகமான இனிப்பு உணவு, இவைகளும் பற்கள் ஆட காரணமாகும்.
ஆண்டிமைக்ரோபியல் பண்பு கொண்ட பூண்டு பற்கள் 2 எடுத்து தட்டி, பற்கள் ஆடும் இடத்தில் வைத்தாலே நுண்ணுயிரிகள் நீங்குவதுடன், பற்களும் பலப்படும்... அல்லது, மஞ்சள் தூள், மிளகுதூள் இரண்டையும் சேர்த்து ஈறுகளில் வைத்து மென்மையாக மசாஜ் செய்யலாம்.. நெல்லிக்காய் இடித்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம். அல்லது நெல்லிக்காயை தினமும் மென்று சாப்பிட்டு வந்தாலே பற்கள் உறுதிப்பெறும்.
நல்லெண்ணெய்: நல்லெண்ணைய்யை எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாய்க்குள்ளேயே வைக்கலாம். அல்லது கடுகு எண்ணெயில் உப்பு கலந்து வாயை கழுவி வந்தாலும் ஆடும் பற்கள் உறுதிப்படும்..
மொத்தத்தில், பற்கள் லேசாக ஆடுவது அல்லது மஞ்சள் கறை லேசாக படிவது என ஆரம்ப கட்டமாக இருந்தால், தற்காலிகமாக மட்டுமே இதுபோன்ற வீட்டு வைத்தியங்கள் பயன்படும். மற்றபடி, பற்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று, சிகிச்சையை பெறுவதே முறையான ஆரோக்கியமாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications