அமுக்கிரா கிழங்கு.. ஊளைச்சதை முதல் நரம்பு தளர்ச்சிவரை நீக்கும் அமுக்கிரான் கிழங்கு பொடி.. செம மூலிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நரம்புகளை பலப்படுத்துவது முதல் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டுவதுவரை பயன்படக்கூடியது அமுக்கிரா கிழங்கு.. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கிழங்குக்கெனவே தனி இடம் உள்ளது.

மலைப்பகுதிகளில் காணப்படும் மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை இதுவாகும்.. இதன் மருத்துவ குணத்தை அறிந்துகொண்டதால்தான், நம்முடைய முன்னோர்கள் அமுக்கரா கிழங்கை, அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

 Do you know the Health Benefits in Amukkura Kizhangu and Amukkuran Kilangu is the Best for Nerves

கசப்புத்தன்மை: கசப்புத்தன்மை வாய்ந்த இந்த அமுக்கிரா கிழங்கை, சுத்தம் செய்து பவுடராக இடித்து வைத்து கொண்டால் பெரும் பலனை அடையலாம்.. நரம்புதளர்ச்சி பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்த பொடி பேருதவி புரிகிறது.

பசும்பாலில், இந்த பொடியை சேர்த்து, கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால், எலும்பு தேய்மானம், நரம்பு தளர்ச்சி உட்பட, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். உடலுள்ள பலவீனங்களை போக்கி பலத்தை தரக்கூடியது இந்த கிழங்கு. இந்த பொடியை காலை, மாலை பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்..

மாதவிடாய்: பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்தால், அல்லது தைராய்டு பிரச்சனை இருந்தால் அமுக்கிரா கிழங்கு பொடி தீர்வு தருகிறது. பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை இருந்தாலோ அல்லது ஆண்மை குறைபாடு இருந்தாலோ அதற்கும் இந்த பொடி உதவுகிறது. விந்துக்களை பெருக்கும் தன்மை கொண்டது இந்த கிழங்கு.. இந்த பொடியை, தேனுடன் கலந்து சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் என்பார்கள்..

ஆண்களுக்கு இளமையிலேயே தலைவழுக்கை உட்பட பலவிதமான பிரச்சனைகளுக்கும் இந்த பொடியை வைத்தே நிவாரணம் தேடி கொள்ளலாம்.. அதேபோல, இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் பசியின்மை மெல்ல குறையும்.

அமுக்கிரா கிழங்கு: அமுக்கரா கிழங்கில், எச்ஐவி என்ற கொடிய நோய்க்குகூட மருந்து உள்ளதாம்.. இடுப்பு வலி அதிகமாக இருந்தால், அமுக்கிரா கிழங்கை பச்சையாகவே எடுத்து, பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வைத்து, பற்றுபோல போடலாம். அல்லது உடலில் வீக்கங்கள் அதிகமாக இருந்தால், இந்த கிழங்குடன், சிறிது சுக்கு சேர்த்து அரைத்து, பற்று போல போடலாம்...

உடல் எடை குறையவும் இந்த கிழங்கின் பொடியை பயன்படுத்தலாம்.. 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள ஊளைச்சதை குறையும் என்கிறார்கள்.. ஆனால், இதுபோன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+