மருத்துவ குணம் வாய்ந்த மூங்கில் குருத்து.. யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? என்ன நன்மைகள்?
சென்னை: மூங்கில் குருத்துவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்து.
சித்தர்களும் நம் முன்னோர்களும் உணவு மூலம் எப்படியெல்லாம் நோய்களை குணப்படுத்துவது என்கிற சூட்சமத்தை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் நாம்தான் அதை எல்லாம் மதிக்காமல் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம்.

இந்த மருந்துகள் சாப்பிடுவதற்கு முன்னாடியா இல்லை பின்னாடியா என கேட்டால் சாப்பாடே அதுதான் என்ற ஒரு காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு கைநிறைய மருந்துகளை கலர்கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல் சாப்பிட்டு வருகிறோம்.
ஆனால் மூதாதையர்கள் நமக்காக எத்தனை அற்புதமான மூலிகைகளையும் உணவு பொருட்களையும் தாவரங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அதையெல்லாம் சாப்பிட்டாலே வாழ்நாள் முழுவதும் நோய் இல்லாமல் இருக்கலாமே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.
அந்த வகையில் இன்று ஒரு அற்புதமான தாவரத்தைத்தான் பார்க்க போகிறோம். மூங்கில் தாவரத்தில இருக்கும் மூங்கில் குருத்துகள். இவற்றில் அதிக கொழுப்போ கலோரிகளோ கிடையாது. மிகவும் ருசியாக இருக்கும். இந்த மூங்கில் தண்டுகளுக்கு மூங்கில் குருத்து என்றும் மூங்குறுத்து என்றும் பெயர்கள் உண்டு. இவை ஆரோக்கியமானவை.
இந்த மூங்கில் குருத்துகள் பாக்டீரியா, வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து மிகுந்தது. இதில் நிறைய ஆரோக்கியமான விஷயங்கள் உள்ளன. இந்த மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் உடல் பருமனை குறைக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் பருமனுக்கு எதிராக உள்ளது.
இது இதய தமனிகளில் இருந்து கொழுப்புகளை எளிதாக்க உதவுகிறது. உடல் முழுவதும் ரத்தத்தின் இயக்கம் எளிதாக்க உதவுகிறது. இதில் நிறைய விட்டமின்களும் தாதுக்களும் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. மூங்கில் குருத்து வயிற்றுப்போக்குக்கு நல்லது. குடல் இயக்கங்களையும் பாதுகாக்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது.

இது சிறந்த ஆன்டிபயாடிக். நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கிறது. ஆஸ்துமா, இருமல், பித்தப்பை பிரச்சினைகளை தீர்க்கிறது. சீரற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்கிறது. மாதவிடாயால் ஏற்படும் வயிற்றுப்பிடிப்பு மற்றும் ரத்தபோக்கு போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. கர்ப்பிணிகள் இதை சாப்பிடக் கூடாது. இது கருப்பையை சுருக்கும்.
ரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்கள் மூங்கில் குருத்தை உணவில் சேர்த்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இதை சாப்பிடக் கூடாது. தைராய்டு உள்ளர்களும் தாய்ப்பால் தரும் பெண்களும் இந்த மூங்கில் குருத்தை தவிர்க்க வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications