கேன்சரை 75% தடுக்கும் ஒரு சூப்பர் காய்.. இதயத்திற்கு நல்லது! கடி ஜோக்குகளுக்கு பேர் போன காய்
சென்னை: பெயரில்தான் காரம் இருக்கிறது, ஆனால் இது உடலுக்கு மிகவும் நல்லது. இது உடல் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
குடை மிளகாய் இது ஒரு காயா இல்லை பழமா என்பதை சிலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். ஆனால் இது குறித்து இரு மாதிரியான விஷயங்கள் உலா வருகின்றன. இதை ஒரு மூலிகை என்றும் அழைக்கிறார்கள்.

இந்த குடை மிளகாயில் கேப்சைசின் எனும் ரசாயனம் இருக்கிறது. இந்த ரசாயனத்தால் உடலில் உள்ள வலியும் அழற்சியும் குறையும். இந்த குடை மிளகாய் பொதுவாக நரம்பு வலிக்கு பயன்படுத்துகிறோம். அது போல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அது போல் ஜீரண பிரச்சினைகளையும் தீர்க்கிறது. அது போல் இதயத்தின் பிரச்சினைகளையும் ரத்த குழாய்களில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்கிறது. இந்த குடை மிளகாயில் 1.18 கிராம் புரதம் உள்ளது. மேலும் 0.36 கிராம் கொழுப்பும் உள்ளது. 7.28 கிராம் கார்போஹைட்ரேட்டும் 5 மில்லி சர்க்கரையும் உள்ளது. இதில் 2.4 கிராம் நார்சத்து உள்ளது.
சோடியமும் பொட்டாசியமும் முறையே 2 மில்லியும் 251 மில்லியும் உள்ளது. கேப்சிகமில் விட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை நம் உடலின் செல்களை காத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்பெற செய்கிறது. இந்த கேப்சிகமின் பயன்கள் என பார்த்தோமேயானால் கண் பார்வைக்கு நல்லது. இதில் ஜியாஜாந்தின் மற்றும் லூட்டின் உள்ளது.
இவை இரண்டுமே ரெட்டினாவை பாதுகாக்கும். இந்த காயில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. அது போல் ரத்த சோகையை கட்டுப்படுத்துகிறது. கோபத்தை குறைக்கிறது. இந்த குடைமிளகாயில் விட்டமின் பி6, மெக்னீசியம், சோடியம் இருக்கிறது. இவையெல்லாம் நரம்புகள் செயலாற்ற முக்கியமானவை. இதய துடிப்பை சீராக்கும். இந்த குடைமிளகாயில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி இருப்பதால் இது கேன்சர் செல்களை உருவாகாமல் தடுக்கும்.
ஆரஞ்ச் நிறம் மற்றும் சிகப்பு நிற குடைமிளகாய்கள் ப்ரோஸ்டேட் கேன்சரை 75 சதவீதம் தடுக்கக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. மேங்கனீஸ் அதிகம் இருப்பதால் எலும்பு பிரச்சினைகளை தீர்க்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.

தோலுக்கும் நன்மையை தருகிறது.விட்டமின் சி அதிகம் காணப்படுவதால் இது முடிக்கும் நல்லது. முடியின் வேர்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால் எடை குறைப்புக்கு மிகவும் உதவும். இந்த குடைமிளகாய்கள் பச்சை நிறம், ஆரஞ்ச் நிறம், சிகப்பு நிறம், மஞ்சள் நிறம், ஊதா அல்லது கருப்பு நிறத்திலும் உள்ளன.
இந்த காய் கடி ஜோக்குகளுக்கும் பேர் போனது. மழையில் நனையாத காய் எது என கேட்டால் நாம் விழிப்பும். உடனே அதை கேட்டவர் குடை மிளகாய் என கூறி நம்மை அசர வைப்பார். இதெல்லாம் 90ஸ் ஜோக்குகள்தான். இருந்தாலும் சொல்லிவைப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications