பார்ப்பதற்குத்தான் டிராகன்.. உள்ளே பார்த்தால் சோ ஸ்வீட்! மெனோபாஸ் வயது பெண்கள் சாப்பிட வேண்டிய பழம்
சென்னை: டிராகன் பற்றி தெரியும்... டிராகன் பழம் தெரியுமா.. இதன் மருத்துவ பயன்கள் என்னவென தெரியுமா?
டிராகன்களை சீனாவில் லக்கியாக கொண்டாடுகிறார்கள். அவர்களது பண்டிகையின் போது டிராகன் பலூன்கள் காற்றில் பறக்கவிடப்படுகிறது. அந்த பழம் ஸ்வீட்டாக இருந்தாலும் அதன் உருவ அமைப்பை வைத்தே அதற்கு டிராகன் என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த பழத்தை கட் செய்தால் போதும் வெண்மை நிறத்தில் கருப்பு நிற எள் போன்ற கொட்டைகள் இருக்கும். எள் என்பதை விட சப்ஜா விதைகள் போன்று கொட்டைகள் என்று கூட சொல்லலாம். வெள்ளை நிற சதைக்கு பதிலாக பிங்க் நிறத்திலும் இருக்கும்.
அதன் மீதுள்ள முள் போன்ற தோளை உரித்துவிட்டு சாப்பிட்டால் அத்தனை சுவையாக இருக்கும். இதில் சுவை மட்டுமல்லாமல் உடல்நலனுக்கு தேவையான விஷயங்களும் இருப்பதால் இதை மக்கள் தவிர்க்காமல் தங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருக்கின்றன. இதனால் இது கேன்சர் வருவதை தடுக்கிறது.
இந்த பழத்தில் விட்டமின்கள் இ, சி, மெக்னீசியம், இரும்பு ஆகியவை உள்ளனர். இதில் புரதம் மட்டுமே 3 கிராம் உள்ளது. கொழுப்பு இல்லவே இல்லை. கால்சியம் சத்துக்கள் 107 கிராம் உள்ளன. இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதால் இது ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கான தொடர் மருத்துவ சிகிச்சைகளை தவிர்க்கலாம்.
இந்த பழம் கேன்சரை எதிர்த்து போராடும். குறிப்பாக காலன் கேன்சரை தடுக்கிறது. விட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அது போல் ஜீரணத்திற்கும் வழிவகுக்கிறது. இது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதயம் சார்ந்த நோய்களும் தவிர்க்கப்படுகிறது. இதயத்திற்கு நல்லது. சிவப்பு நிற சதை கொண்ட பழங்கள் கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
அந்த பழத்தில் உள்ள சிறிய கருப்பு நிற கொட்டைகளில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 ஆகியவை இருக்கின்றன. இவை மாரடைப்பை தடுக்கிறது. அது போல் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைத்து வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. முடியின் வளர்ச்சிக்கு இந்த பழம் மிகவும் நல்லது.
இந்த பழத்தில் பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கிறது. கண் புரை ஏற்படாமல் பாதுகாக்கிறது. கர்ப்பிணிகள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் விட்டமின் பி இருக்கிறது. கருவின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் நேரத்தில் ஏற்படும் சிக்கல்களை குறைக்கிறது. டிராகன் பழத்தில் பீட்டாலைன்கள், ஹைட்ராக்ஸின்னமேட், ஃபிளேவனாய்டு ஆகிய ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இதில் ஹைட்ராக்ஸின்னமேட் என்பது கேன்சர் செல்களின் உற்பத்தியை தடுக்கிறது. ஃபிளேவனாய்டுகள் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கின்றன. பீட்டாலைன்கள் கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications