சர்க்கரை நோயாளி அரிசி சாதம் சாப்பிடலாமா? கீரை சாப்பிடறீங்களா? அதென்ன "நாவல் பவுடர்"?..அட்டகாச டிப்ஸ்
சென்னை: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு எது தெரியுமா? ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளையே பெரும்பாலும் எடுத்து கொள்ள வேண்டும். இதனால், இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதன் வேகத்தை குறைக்கின்றது.

உடலில் சர்க்கரை, கொழுப்பு சேர்வதும் வெகுவாக தடுக்கப்பட்டு விடுகிறது.. ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைகிறது. அதனால்தான், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்கக்கூடாது என்கிறார்கள்.
கணையத்தில் இன்சுலின்: காய்கறிகள், கீரைகளையும் தாண்டி, சமையலில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள், வெந்தயம் என இந்த நான்கையும் அதிக அளவு சேர்க்க சொல்கிறார்கள்.. கணையத்தில் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும், டைப் 2 சர்க்கரைநோய் கட்டுப்படுத்தவும், இந்த மஞ்சள்தான் உதவிகிறது..
வெந்தயத்தை பொறுத்தவரை கசப்பு தன்மை வாய்ந்தது.. எந்த உணவெல்லாம் கசப்பை தருகிறதோ, அதெல்லாமே சர்க்கரை நோயாளிகளின் இனிப்பு மருந்தாகும.
சர்க்கரை நோயாளிகள்: அந்தவகையில், வெந்தயத்தில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்கள், நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து என மொத்தமும் நிரம்பியுள்ளதால், சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை எப்படியாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவதை, இந்த வெந்தயத்திலுள்ள வைட்டமின் A தடுத்து நிறுத்துகிறது.
கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், புரோகோலி, தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, எலுமிச்சை, நாவல்பழம், கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற காய்கறிகள், பழங்களை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.
முட்டைக்கோஸ்: ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பீன்ஸ் மற்றும் முட்டைக்கோஸ், பாலக் கீரை இந்த மூன்றுமே பெரிதும் துணைபுரிகிறது. அதிலும், முட்டைக்கோஸின் இலைகளை சூப் போல செய்து சாப்பிடலாம்.
ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு, பழங்களிலேயே, நாவல் பழம்தான் சிறந்தது என்கிறார்கள். அதிலும் இந்த பழத்தின் கொட்டைகளை, தூள் செய்து சாப்பிட்டு வரும்போது, சர்க்கரை நோய் கட்டுப்படும். எனவே, டாக்டரின் முறையான ஆலோசனையின் பேரில் இந்த நாவல் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
குதிரைவாலி: தானியங்களை பொறுத்தவரை, குதிரைவாலி அரிசியை தாராளமாக பயன்படுத்தலாம்.. 25 கிராம் குதிரை வாலியில் 2.4 கிராம் அளவிற்கு நார்ச்சத்து இருக்கிறதாம்.. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற உணவாக இந்த அரிசி உள்ளது.. கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை இந்த அரிசி தாமதப்படுத்துவதுடன், உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது.
குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால், இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கக்கூடாது என்கிறார்கள். பீட்டா கரோட்டின் உள்ளதால், கண் சம்பந்தமான கோளாறு வரவிடாமல் செய்யும்.
அற்புத நன்மைகள்: எனவே, இதயப்பிரச்சனை உள்ளவர்களும், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் குறிப்பிட்ட அளவில் இந்த அரிசியை பயன்படுத்தினால், கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications