நாவல் பழம் - இதய நோய் வராமல் தடுப்பது எப்படி?.. முகத்தை பொலிவாக்கும்.. இயற்கை தந்த கொடை!
சென்னை: நாவல் பழம் அல்லது நாகப்பழம்- இதன் மருத்துவ குணங்கள் என்னவென தெரியுமா? இந்த பழம் சீசனில் கிடைக்கும் பழமாகும்.
காஸ்ட்லி பழங்களில் மட்டும்தான் மருத்துவ குணங்கள் இருக்கிறது என நீங்கள் நம்பினால் அது தவறு. சாலையோர மரத்தில் கிடைக்கும் நாவல் பழத்திலும் அதிக நன்மைகள் இருக்கின்றன.
இந்த மரங்கள் கிராமப்புறங்களிலும் வீடுகள் தோறும் இருக்கும். இந்த நாவல் மரத்தின் காற்று உடலுக்கு அத்தனை நல்லது. இந்த பழம் பொதுவாக கோடை காலத்தில் கிடைக்கும்.

இந்த பழங்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இது குறைந்த கலோரி கொண்டது, ஆனால் அதிக சுவையுடையது. இதில் விட்டமின் சி இருக்கிறது. தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், போலிக் ஆசிட் ஆகியவை உள்ளன. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ் இருக்கிறது. மேலும் ஆன்டி பாக்டீரியல் குணமும் இருக்கிறது.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழம். இதை உண்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். அஜீரண மண்டலத்தை சீர்படுத்தும். தோல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். விட்டமின் சி இருப்பதால் முகத்தில் பருக்கள் வராது, வயதான தோற்றத்தை ஏற்படுத்தாது. விட்டமின் சி ரத்தத்தை சுத்தப்படுத்தும். முகத்தை பொலிவாக வைத்திருக்கும்.
நாவல் பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இந்த பழத்தில் பாலிபீனோலிக் இருப்பதால் நீரிழிவு சிகிச்சையில் முக்கிய கடமையாற்றுகிறது. இதய நோய் வராமல் தடுக்கும். ஜாமுன் பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இதயத்தை காக்கும். உடல் எடை குறைப்புக்கும் இது உகந்தது. இதில் கலோரி குறைந்த அளவு இருக்கிறது. உடலில் நீர் சத்து வெளியேறுவதிலிருந்து தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஸ்டாமினாவை வலுப்படுத்தும். வாயில் உள்ள நோய் தொற்றுகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் தன்மை கொணடது. பற்களையும் ஈறுகளையும் வலுப்படுத்தி தொண்டை பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். அது போல் கல்லீரல் பிரச்சினைகளையும் சிறுநீர் பிரச்சினைகளையும் வயிற்றுப்போக்கு பிரச்சினையையும் சரி செய்யும்.
இந்த பழம் குளிர்ச்சியானது என்பதால் இதை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நோயற்ற வாழ்வை வாழுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications