காராமணி.. சர்க்கரை நோயாளிகளே.. தவற விடாதீங்க.. ஆச்சரிய நலனை அள்ளி தரும் ஏழைகளின் அமிர்தம் "காராமணி"
சென்னை: பயிறுகள் என்றாலே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஆயுளை கூட்டக்கூடியது.. அதில் ஒன்றுதான் காராமணி பயிறுகள்.
காராமணியை சிலர் பயத்தங்காய் என்று சொல்வார்கள்.. தென் மாவட்டத்தில் தட்டைப்பயிறு என்பார்கள்.. அவரை குடும்பத்தை சேர்ந்தது இந்த காராமணி.. ஆனால், கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பீன்ஸ் போலவே இருக்கும்.. ஆனால், இன்னும் நீளமாக, மெலிதாக இருக்கும். உள்ளே காராமணி பருப்புகள் இருக்கும்.

புரோட்டீன்: குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பயிறில், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து, போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு பெஸ்ட் பயிறு இந்த காராமணி.
காரணம், முக்கியமாக தேவைப்படுவதே நார்ச்சத்துதான்.. அது இந்த காராமணியில் நிறையவே உள்ளது.. உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றக்கூடிய தன்மை இந்த காராமணிக்கு உண்டு என்பதால், உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது.. அதுமட்டுமல்ல, அரை கப் காரமணியில் 1 கிராம் கொழுப்பு மட்டுமே இருக்கிறதாம்.. காராமணியை வேகவைத்து, வெங்காயம், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறையுமாம்.
கல்லீரல் பாதுகாப்பு: காராமணியை அடிக்கடி சாப்பிடுவதால், கல்லீரல் பிரச்சனைகள் நெருங்குவதில்லை.. இதனால் மஞ்சள் காமாலை நோய்கள் ஏற்படாமலும் தடுக்கப்படுகின்றன..
சருமத்துக்கு பாதுகாவலனாக இந்த காராமணி திகழ்கிறது.. இதனால், முதுமை தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. பாசிபருப்பு எப்படி நம்முடைய சருமத்துக்கு உதவுகிறதோ, அதுபோலவேதான் இந்த காராமணியும் உதவுகிறது. தலைமுடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள், காராமணியை அடிக்கடி சாப்பிடலாம்.. உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், காராமணியை சாப்பிடலாம்.. இதனால், பக்கவாதம், இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
புற்றுநோய்: ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைந்துள்ளதால், புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. குறிப்பாக, வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும் பண்புகளை கொண்டது இந்த பயிறு.. இதிலுள்ள வைட்டமின் சி- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.. முக்கியமாக நீர்த்தன்மை நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது இன்சுலின் சுரப்பினை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இந்த பயிறில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பிலும், பற்களின் உறுதித்தன்மைக்கும் உதவுகிறது.. கோலின் என்ற வைட்டமின் B நிறைந்த இந்த பயிறு, கல்லீரல் கோளாறுகளையும் அண்டவிடாமல் செய்கிறது.
நிம்மதி தூக்கம்: காராமணியில் டிரிப்தோபன் சத்துக்கள் உள்ளதால், உடல் சோர்வை போக்குவதுடன், நன்றாக தூக்கத்தையும் தரச்செய்கிறது. அதனால், தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், தூங்கச்செல்வதற்கு முன்பு, காராமணியை சிறிது சாப்பிட்டுவிட்டு படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
கர்ப்பிணிகள்: வாயுப் பிரச்னை இருப்பவர்கள் இந்த காராமணியை தவிர்க்கலாம்.. ஆனால், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகள், இந்த காராமணியை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த காராமணியை சாப்பிடலாம்.. அதிக அளவில் ஃபோலேட் சத்து இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பார்கள்..
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications